நடப்பு ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. ஏற்கனவே முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவி இருந்ததால் இம்முறை மீண்டு வரவேண்டும் என்று பேட்டிங்கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டாஸ் வென்று முதலில் பந்து வீசிய லக்னோ அணியின் பந்து வீச்சாளர்களை சிஎஸ்கே அணியின் வீரர்கள் சரமாரியாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர்.

மளமளவென உயர்ந்து ஸ்கோர் இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 210 ரன்களை தொட்டது. சென்னை அணி சார்பாக ராபின் உத்தப்பா 50 ரன்களும், ஷிவம் துபே 49 ரன்களையும் குவித்தனர். அதுதவிர மிடில் ஆர்டரில் ராயுடு, மொயின் அலி, ஜடேஜா, தோனி ஆகியோரும் சிறப்பாக விளையாடவே பேட்டிங்கில் அசத்தலான ஆட்டத்தை சி.எஸ்.கே அணி வெளிப்படுத்தியது.
பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய லக்னோ அணியும் சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி ரன்களை சேர்த்து கொண்டே வந்தது. இறுதியில் இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தபோது சிஎஸ்கே அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருந்ததாக பார்க்கப்பட்டது.

ஆனால் 19-வது ஓவரை பகுதிநேர வேகப்பந்து வீச்சாளரான ஷிவம் துபே வீச அந்த ஓவரில் 25 ரன்கள் சென்றது. இந்த ஓவர்தான் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் சமூக வலைதளத்திலும் இந்த ஓவர் குறித்த விமர்சனங்கள் அதிக அளவில் எழுந்துள்ளன. இந்நிலையில் ஷிவம் துபே இந்த முக்கியமான 19-வது ஓவரை வீச என்ன காரணம் என்பது குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில் : லக்னோ அணி பேட்டிங் செய்தபோது ஆடுகளத்தில் பெரிய அளவில் டியூ இருந்தது. மேலும் சுழற் பந்துவீச்சுக்கு மைதானம் சிறிதளவுகூட கைகொடுக்காத நிலையில் பந்தை கிரிப் செய்து வீசவே பவுலர்கள் கஷ்டப்பட்டனர். பனிப்பொழிவு அதிகமாக இருந்த காரணத்தினால் இறுதி நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீச கொடுப்பது தவறு என்பதனால்தான் ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு 22 வயசில் ஒரு 360 டிகிரி பேட்ஸ்மேன் கிடைச்சாச்சு – யார் இவர்? அப்படி என்ன செய்தார்?
இதேபோன்று கடைசி நேரத்தில் ஓரிரு ஓவர்கள் பகுதிநேர பவுலர்கள் வீசுவது தவறு கிடையாது. அதனால் தான் போட்டி இறுதி வரை செல்ல வேண்டும் என்பதற்காகவே ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கினோம். கிரிக்கெட்டில் இது போன்று நடப்பது சகஜம் தான். இனிவரும் போட்டிகளில் முன்கூட்டியே பவுலர்களை வரிசைப்படுத்தி சரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என பிளமிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



