இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக சி.எஸ்.கே பயிற்சியாளரான இவருக்கு அதிக வாய்ப்புள்ளது – பி.சி.சி.ஐ

Ravi-Shastri
- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் உலகக் கோப்பைத் தொடரோடு முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து வரவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்காக அவருக்கு 45 நாட்கள் மேலும் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.

Ravi

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 30ஆம் தேதி வரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டு .

இந்நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியூசிலாந்து அணியை சேர்ந்த முன்னாள் வீரரான ஸ்டீபன் பிளமிங் விண்ணப்பிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் இவருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக வாய்ப்பும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் சிஎஸ்கே அணி கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து பயிற்சியாளராக இவரே அந்த வழியை அந்த அணியை வழிநடத்தி வருகிறார்.

Fleming

இவரது பயிற்சியின் கீழ் சிஎஸ்கே மூன்று முறை கோப்பையை வென்று உள்ளதால் அவருக்கு முன்னுரிமை அளிக்க பிசிசிஐ யோசித்து வருகிறது. அதன்படி ஒருவேளை பிளம்மிங் இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தால் அதனை கணக்கில் கொண்டு அவருக்கு வாய்ப்பு வழங்கும் பிசிசிஐ திட்டம் வகுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement