சென்னை சூப்பர் கிங்ஸ் ஏன் ஐபிஎல் 2018 சாம்பியனாக முடியும் என்பதற்கனா 5 காரணங்கள்..!

2018csk
- Advertisement -

சென்னை அணி இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு ஐ.பி.எல் தொடரில் களமிறங்கி கலக்கி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய இந்த அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும், இதுவரை நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடர்களில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மேலும், இந்த தொடரிலும் சென்னை அணி சாம்பியன் பட்டதை வெல்வதற்க்கான 5 காரணங்களை இங்கே காணலாம்.

- Advertisement -

சென்னை அணியின் பந்து வீச்சு:-
நடந்து வரும் 11 வது ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியின் பந்துவீச்சுகள் சிறப்பாக இல்லை என்றாலும் இந்த அணியில் அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் அதிகம் உள்ளனர் .மேலும், முக்கியமான கட்டத்தில் சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சாதுர்யமாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு வித்திடுகின்றனர்.

சென்னை அணியின் பேட்டிங்:-
இதுவரை இந்த சீசனில் சென்னை அணி விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் 150 ரன்களுக்கு மேல் தான் குவித்திருக்கிறது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான வாட்சன் இந்த தொடரில் அபாரமாக விளையாடிவருகிறார் . அதன் பின்னர் களமிறங்கும் சின்ன தல ரைனாவும் ஆட்டத்திற்கு ஏற்றார் போல விளையாடி வருகிறார்.ஒரு வேலை தொடக்க ஆட்டக்காரர்கள் சுதப்பினாலும் மிடில் ஆர்டரில் இருக்கும் தோனி, பிராவோ போன்றவர்கள் அணியை தூக்கிவிடுகின்றனர்.

அம்பதி ராயுடுவின் நிலையான ஆட்டம்:-
கடந்து ஆண்டு வரை மும்பை அணியில் விளையாடி வந்த இவர், தற்போது சென்னை அணியில் அபாரமாக விளையாடி வருகிறார். இவர் இந்த தொடரில் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் சென்னை அணியின் ரன்குவிப்பிற்கு காரணமாக இருந்து வருகிறார். மேலும், வாட்ஸனுக்கு சரியான பேட்டிங் துணையாகவும் இருந்து வருகிறார்.

- Advertisement -

தோனியின் தலைமை :-
தோனி ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த ஐ.பி.எல் தொடரிலும் சென்னை அணியை தலைமை தாங்கி வரும் தோனி சென்னை அணிக்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்ட நட்சத்திரம் தான். தோனியின் கேப்டன் தலைமை இந்த அணிக்கு ஒரு யானை பலம் என்று சொன்னாலும் அது மிகையாகாது.

dhoni-six

பார்மிற்கு திரும்பிய தோனி:-
கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது பேட்டிங்கில் சுதப்பி வந்த தோனி, இந்த ஐ.பி.எல் தொடரில் தனது அத்யாயத்தை திருத்தி எழுதி வருகிறார். தனது அதிரடியான ஆட்டதை மீண்டும் புதுப்பித்துள்ள தோனி, இதுவரை இந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 360 ரன்களை குவித்துள்ளார். மேலும், 27 சிக்சர்களையும் விளாசி இந்த தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

Advertisement