ஸ்மித் காயத்தால் வெளியேறிய பிறகு அவருக்கு பதிலாக இறங்கி பேட்டிங் செய்த வீரர் – ஆஷஸ் தொடரில் அரங்கேறிய வரலாற்று நிகழ்வு

Smith
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த இரண்டாவது போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

Archer

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் அரங்கேறிய அதிசய நிகழ்வு பற்றிய செய்திதான் இது. ஐ.சி.சி சில மாதங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் காயம் ஏற்பட்டு வெளியேறினால் அவர்களுக்கு பதிலாக இறங்கும் மாற்று வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவை செய்யலாம் என்ற விதியினை அறிமுகப்படுத்தியது.

அந்த விதியின் படி முதன் முதலாக களமிறங்கிய வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இளம் வீரரான மார்னஸ் லாபுசாக்னே பெற்றார். முதல் இன்னிங்சில் விளையாடிய போது ஆர்ச்சரின் பந்துவீச்சில் காயம் அடைந்து வெளியேறினார். அதன் பின்னர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது இன்னிங்சில் அவர் விளையாட வரவில்லை.

Marnus

அவருக்கு பதிலாக மாற்று வீரராக மார்னஸ் லாபுசாக்னே களமிறங்கினார். இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த அவர் சிறப்பாக விளையாடி 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாற்றுவீரராக களமிறங்கி பேட்டிங் செய்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement