கொல்கத்தா அணியில் இணைந்துள்ள முதல் அமெரிக்கா வீரர். யார் இவர் ? – முழுவிவரம் இதோ

Ali khan

ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. எந்த ஒரு வருடமும் இல்லாமல் இந்த வருடம் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தடைகள் காரணமாக வெளிநாட்டில் நடத்தப்படுகிறது. அனைத்து அணிகளும் வீரர்களும் பயிற்சியாளர்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற பின்னரும் பல பிரச்சனைகள் வந்து கொண்டேதான் இருக்கிறது.

ipl

பல வீரர்கள் துபாய்க்கு வராமலேயே தொடரில் இருந்து விலகி விட்டார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற முக்கியமான அணியிலிருந்து முக்கியமான வீரர்களில் சிலர் வெளியேறி விட்டார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து மற்றும் ஒரு இளம் வீரர் ஆகியோர் வெளியேறிவிட்டனர்.

கொல்கத்தா அணியிலிருந்து இங்கிலாந்து நாட்டின் வேகப்பந்துவீச்சாளர் ஹாரி குர்னி வெளியேறி விட்டார். இதன்காரணமாக அவருக்கு மாற்று வீரரை கடந்த 2 வாரமாக தேடிவந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் அலி கான் என்ற ஒரு வீரரை அவருக்கு மாற்று வீரராக கொண்டுவந்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

ali khan 1

இப்படி இவர் கொல்கத்தா அணிக்காக விளையாடும் போது ஐபிஎல் தொடரில் விளையாடும் முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை பெறுவார்.ஏற்கனவே இவர் கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் ஒரு பந்து வீச்சாளராக விளையாடியிருக்கிறார். மேலும் அமெரிக்கா சர்வதேச கிரிக்கெட் அணிக்கு வேகப்பந்து வீச்சாளராக இருந்திருக்கிறார்.

- Advertisement -

Ali-Khan

தற்போது கொல்கத்தா அணி அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. மேலும் அவர் துபாயில் கொல்கத்தா அணியுடன் இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. எப்படிப் பார்த்தாலும் இவருக்கு ஒரு சில போட்டிகளில் தான் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.