Aaron Finch : 38 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தும் நாங்கள் பெற்ற வெற்றிக்கு இதுவே காரணம் – பின்ச்

உலகக் கோப்பை தொடரின் பத்தாவது போட்டி நேற்று நாட்டிங்ஹாம் நகரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ்

- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் பத்தாவது போட்டி நேற்று நாட்டிங்ஹாம் நகரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குல்டர் 92 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களையும் அடித்தனர்.

- Advertisement -

பின்னர் 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் சார்பாக மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசி 10 ஓவர்களில் 46 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றது ஒரு கடினமாக முயற்சிக்கு பிறகு எங்களுக்கு வெற்றி கிடைத்தது என்றே நினைக்கிறன். ஏனெனில் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த பின்பு திரும்பி மீண்டு வருவது கடினம். ஆனால் அந்த நேரத்தில் ஸ்மித் மற்றும் குல்டர் நைல் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல ஸ்கோரை தந்தனர்.

மேலும் பந்துவீச்சில் எங்களால் இந்த ரன்களுக்குள் வெஸ்ட் இண்டீஸ் அணியை கட்டுப்படுத்த முடியும் என்றும் நினைத்தோம். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி இடம் அடிக்கடி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் இல்லையென்றால் அவர்களது பேட்ஸ்மேன்கள் எந்த நிலையிலும் ஆட்டத்தை மாற்றக் கூடியவர்கள் ஆகவே தொடர்ச்சியாக விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த போட்டியில் வெற்றி பெற்றோம் என்று பின்ச் கூறினார்

Advertisement