AUS vs ENG : இங்கிலாந்தை வெற்றி பெற்றது போதாது. இது நடக்கும்வரை நாங்கள் தொடர்ந்து சிறப்பாக ஆடுவோம் – பின்ச்

உலக கோப்பை தொடரின் 32 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து

Finch
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 32 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

aus vs eng

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்தது. பின்ச் அதிகபட்சமாக 100 ரன்களை குவித்தார் மேலும் வார்னர் 53 ரன்கள் குவித்தார் .

இதனைத் தொடர்ந்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 44.4 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்துசார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 89 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணியின் சார்பில் பெரென்ட்ராப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிச்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Finch

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் கூறியதாவது : நாம் தொடரை ஜெயிக்க வேண்டுமென்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் மட்டுமே அது சாத்தியம். அப்படி அரையிறுதியில் முதல் அணியாக தகுதி பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை நாங்கள் கிரிக்கெட் நன்றாக விளையாடி வருகிறோம். இதே பாதையில் நாங்கள் செல்வோம்.

Starc

இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ் மிரட்டக்கூடிய வீரராக உள்ளார். ஸ்டார்க் மற்றும் மற்ற பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். வார்னர் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். அவர் மேலும் இந்த தொடரில் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றிகளை குவிப்பார் என்றும் இப்போது ஆஸ்திரேலிய அணி அரை இறுதியை அடைந்து முக்கியமல்ல கோப்பையை கைப்பற்றும் வரை இதே பாதையில் செல்ல வேண்டும் என்பதே எங்களது இலக்கு என்று பின்ச் கூறினார்.

Advertisement