AUS vs BAN : எங்களிடம் இந்த பலம் இருப்பதால் தொடர்ச்சியாக வெற்றி பெறுகிறோம் – பின்ச் பேட்டி

உலககோப்பைத் தொடரின் 26வது போட்டி நேற்று நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும்

Finch
- Advertisement -

உலககோப்பைத் தொடரின் 26வது போட்டி நேற்று நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

aus ban

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வார்னர் 166 ரன்கள் அடித்தார். கவாஜா 89 ரன்கள் குவித்தார்.

பின்னர் 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 333 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ரஹீம் 102 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

warner

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் கூறியதாவது : அனைத்து முறையும் துவக்க பார்ட்னர்ஷிப் நன்றாக போவதால் நாங்கள் தொடர்ச்சியாக வெற்றி கண்டு வருகிறோம். நாங்கள் அனைவரும் உலகக்கோப்பை போட்டிகளில் அனுபவம் உள்ளவர்கள். சிறப்பாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செய்வது இந்த தொடரில் மிக முக்கியம்.

aus

போட்டிக்கு தகுந்த மாதிரி ஸ்பின்னர்கள் இறக்க வேண்டும். நல்லவேளையாக எங்கள் அணியில் முதல் நான்கு வீரர்கள் சிறப்பாக ஆடுகிறார்கள். எனவே இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக ஆடினோம் துவக்க வீரர்களுக்கு இந்த மைதானம் உதவி புரிகிறது என்றும் பின்ச் கூறினார்.

Advertisement