ஐ.பி.எல் மட்டும் நடக்கலைனா ஆஸி வீரர்களின் நிலைமை இதுதான் – ஆரோன் பின்ச் வருத்தம்

finch1
- Advertisement -

கரோனா வைரஸ் வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து விளையாட்டு போட்டிகளும் பெரும் மக்கள் கூடும் நிகழ்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. ஊரே வெறிச்சோடி காணப்படுகிறது. உலகம் முழுவதும் பல பிரபலமான வீதிகளும், பிரபலமான சுற்றுலாத் தலங்களும் ஆட்கள் இல்லாமல் வெற்றிடமாக காணப்படுகின்றது.

corona 1

- Advertisement -

இந்தியாவிலும் அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தற்போது வரை இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் நிர்வாகத்திற்கும், வீரர்களுக்கும் இது பெரும் சுமையாக இருக்கும்.

ஏனெனில் அந்த தொகையை நம்பியே ஐபிஎல் வீரர்கள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்தி வந்தனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து 17 வீரர்கள் இந்தியாவின் பல்வேறு ஐபிஎல் அணிகளில் ஒப்பந்தம் ஆகி இருந்தனர். தற்போது ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட நடக்காது என்ற நிலை வந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் நிதி நெருக்கடியை சந்திக்கும் கூட வாய்ப்பு உள்ளது.

Ipl cup

இது குறித்து ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் பேசியுள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது :
ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட ரத்து செய்யும் நிலைக்கு வந்துவிட்டது. அவ்வாறு ரத்து செய்யப்பட்டால் ஆஸ்திரேலிய வீரர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது. ஒரு பணம் வழங்கும் அமைப்பு இருந்தால் அதில் அவ்வப்போது இவ்வாறு நடப்பது வாடிக்கை.

- Advertisement -

இருந்தாலும் வீரர்கள் அனைவரும் ஒன்று பட்ட மனநிலையில் உள்ள. நிதி நெருக்கடியை சந்திக்கவும் தயாராக உள்ளோம். தற்போதைய தேவை கொரோனா என்ற கொடிய தொற்று நோயிலிருந்து உலக மக்கள் அனைவரும் விடுபடுவதே ஆகும் . இதனை எதிர் நோக்கி காத்துள்ளோம் இவ்வாறு கூறியுள்ளார் ஆரோன் பின்ச்.

Warner

இந்நிலையில் இந்த வருட ஐ.பி.எல் தொடர் நடைபெற்றால் அதில் டேவிட் வார்னர் பங்கேற்பார் என்று வார்னரின் மேனேஜர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement