Aaron Finch : நாங்கள் செய்த இந்த தவறால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது – பின்ச் ஓபன் டாக்

உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி நேற்று மதியம் ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும்

Finch
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி நேற்று மதியம் ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தநிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ind vs aus

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் தவான் 117 ரன்களும், கோலி 82 ரன்களும் எடுத்தனர்.

அதன்பின்னர் 353 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 316 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்மித் 69 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பாக புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சதமடித்த தவான் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Dhawan

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் கூறியதாவது : இந்த போட்டியில் தோல்வி அடைந்தது வருத்தமளிக்கிறது. இந்திய அணி பேட்டிங் சிறப்பாக இருந்தது அவர்கள் கடைசிவரை ரன்களை குவித்து கொண்டே இருந்தனர். அதனால் நாங்கள் அவர்களிடம் இருந்து விக்கெட்டை எதிர்பார்க்க முடியவில்லை. ரன்களை கட்டுப்படுத்தவே யோசித்து பவுலிங் செய்தோம். மேலும் கடைசி 10 ஓவர்களில் 120 ரன்களை விட்டுக் கொடுத்தோம் இந்த ரன்கள் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Bhuvi

இந்த போட்டியில் எங்களது பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. ஆனால் அடுத்த போட்டியில் நாங்கள் மீண்டு வருவோம். அதேபோன்று பேட்டிங் செய்யும்போது வெற்றிக்கான பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தோம் ஆனால் சிறப்பான பவுலிங்கால் இந்த போட்டி எங்கள் கைகளில் இருந்து இந்திய அணியின் கைகளுக்கு சென்றது. எனவே மீண்டும் அடுத்தப் போட்டியில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று பின்ச் கூறினார்.

Advertisement