கடைசி ஓவரில் 8 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய நிலை வந்தால் இந்த இந்திய பந்துவீச்சாளர் தான் கரெக்ட்டா இருப்பார் – பின்ச் பதில்

- Advertisement -

கொரோனா வைரஸ் பாதிப்பினால் தற்போது உலகமே முடங்கிக் கிடக்கும் நிலையில் இந்தியாவிலும் தற்போது கொரோனா தனது ஆட்டத்தை மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.

- Advertisement -

மேலும் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி நடைபெறாது என்பதால் அனைவரும் தங்களது நேரத்தை இணையத்தில் கழித்து வருகின்றனர். ஐபிஎல் தொடரும் நாளை துவங்க இருந்த நிலையில் இந்த போட்டி ஏப்ரல் 15ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதுவரை இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு துளிகூட வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் உலகளவில் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது நேரத்தை ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர். இந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பின்ச் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

- Advertisement -

மேலும் வெற்றிபெற நினைக்கும் ஒரு போட்டியின் கடைசி ஓவரில் 8 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுமாயின் அந்த ஓவரை வீச யாரை அழைப்பீர்கள் ஸ்டார்க் மற்றும் பும்ரா இந்த இருவரில் யாரை நீங்கள் பந்துவீச அழைப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஆரோன் பின்ச் இருவரும் சிறப்பான பந்துவீச்சாளர்கள் இந்த இருவரில் யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இருவரும் டெத் ஓவர்களில் சிறப்பாக வீசக்கூடியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement