IND vs AUS : பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் உண்மையை சொன்ன – பின்ச்

நேற்று முன்தினம் நடந்த உலகக் கோப்பை தொடரின் போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய

Zampa
- Advertisement -

நேற்று முன்தினம் நடந்த உலகக் கோப்பை தொடரின் போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இந்த தொடரில் இது இரண்டாவது வெற்றியாகும்.

zampa 1

- Advertisement -

இந்நிலையில் அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா செய்த செயல் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அவர் மீது பந்தை சேதப்படுத்தியதாக ஐ.சி.சி-யிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 6 ஓவர்கள் வீசிய ஜாம்பா 50 ரன்களை விட்டுக் கொடுத்தது மட்டுமல்லாமல் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.

துவக்கத்தில் இருந்தே இவரது ஓவரை இந்திய அணி வீரர்கள் சிறப்பாக அடித்து விளையாடியதால் அவர் துவக்கத்திலிருந்தே ஒவ்வொரு பந்தினை வீசும் முன் தனது பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு சான்ட் பேப்பர் போன்று ஏதோ ஒன்றை கையிலெடுத்து அடிக்கடி பந்தை தேய்ப்பதை மைதான கேமராமேன்கள் படம்பிடித்துள்ளனர். அதன் அதன்படி ஒவ்வொரு வந்திணையும் வீசுவதற்கு முன் தனது பேண்ட் பாக்கெட்டில் கைவிடும் ஜாம்பா மீண்டும் அதனை எடுத்து பந்தின் மீது தேய்க்கிறார் அவரின் இந்த செயல் கேமராக்களில் தெளிவாக பதிவாகி உள்ளது.

zampa 2

இந்த விவகாரத்தில் இப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் உண்மையை தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி பின்ச் கூறியதாவது : போட்டியின்போது ஈரப்பதம் அதிகம் இருந்ததால் அவ்வப்போது பந்துவீச பந்துவீச்சாளர்கள் அவதிப்பட்டார்கள். அதன் காரணமாகவே ஜாம்பா தனது பேண்ட் பாக்கெட்டில் ஒரு துணி ஒன்றை வைத்திருந்தார். அதன் மூலம் கை ஈரமாகும் பொழுது அதனை வைத்து துடைத்துக்கொண்டு பிறகு பந்து வீச ஆரம்பித்தார்.

இதனை தவறாக புரிந்து கொண்டவர்கள் ஜாம்பா பந்தைச் சேதப்படுத்தியதாக சர்ச்சையை கிளப்பியுள்ளார்கள். அவர் பந்தின் ஈரம் போக துடைத்து பந்துவீசினார் ஆனால் அதையே பந்தைச் சேதப்படுத்தியதாக நினைக்கிறார்கள். இது போன்ற தகவல்கள் முற்றிலும் வதந்தி ஆனது இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் மேலும் நாங்கள் கிரிக்கெட்டை நேர்மையாக திரும்பி விளையாட விரும்புகிறோம் இதுபோன்ற சூழலில் இதுபோன்ற தகவல்களை பகிர வேண்டாம் என்றும் பின்ச் கேட்க்கொண்டார்.

Advertisement