ஒரு வழியா சொதப்பல் மன்னனை அணியில் இருந்து வெளியேற்றிய நிர்வாகம் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Avesh-Khan
Advertisement

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தங்களது அணிகளை அறிவிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கெடு விதித்திருந்ததால் ஒவ்வொரு நாடாக தங்களது உலகக்கோப்பை அணியை வெளியிட்டு வந்தன. இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடர் முடிவடைந்த அடுத்த நாளான இன்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவித்துள்ளது.

Bhuvneshwar-Kumar-1

அதன்படி ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான வீரர்கள் இந்த உலகக் கோப்பை தொடரில் இடம் பிடித்துள்ளனர். அதோடு இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே நிகழ்த்தப்பட்ட வேளையில் அணியில் ஒரு முக்கிய மாற்றமாக இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி ஆரம்பத்தில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால் கடந்த சில தொடர்களாகவே விக்கெட்டுகளை எடுக்க சிரமப்படும் அவர் ரன்களையும் வாரி வழங்கி வருகிறார். இதன் காரணமாக அவரின் மீது ஏற்கனவே விமர்சனங்கள் அதிக அளவில் எழுந்தன.

Avesh-Khan-2

அதோடு ரசிகர்களும் அவர் இன்னும் டி20 கிரிக்கெட்க்கு பக்குவப்படவில்லை என்றும் அவருக்கு போதிய கால அவகாசம் கொடுத்து மீண்டும் அணியில் சேர்க்கலாம் என்றும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் எதிர்வரும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக :

- Advertisement -

பும்ரா, ஹர்ஷல் பட்டேல், புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தேர்வு செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் ஆவேஷ் கானை அணியிலிருந்து விடுவித்துள்ளது. இந்திய நிர்வாகம் எடுத்த இந்த முடிவுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க : அவங்க 2 பேருக்கும் என்ன குறை? அவங்கள ஏன் ஸ்டான்ட் பை பிளேயர்ஸ்ஸா போட்டிருக்கீங்க – நெட்டிசன்கள் கேள்வி

மேலும் ஸ்டான்ட் பை வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி மற்றும் தீபக் சாகர் ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருந்த வேளையில் எதிர்வரும் உலக கோப்பையில் மீண்டும் தங்களது பலத்தை பந்துவீச்சில் நிரூபிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement