- Advertisement -
ஐ.பி.எல்

தோனின்னா சும்மாவா.. ஃபிபா உலகக் கோப்பை ரொனால்டோ வரை எதிரொலித்த தல புகழ்.. ரசிகர்கள் கொண்டாடட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மிகச் சிறந்த வீரர்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஏனெனில் கிரிக்கெட்டின் மீதான காதலால் ரயில்வே வேலையை விட்டு விளையாடத் துவங்கிய அவர் கங்குலி தலைமையில் 2004ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அதிரடியாக விளையாடி மேட்ச் வின்னராக உருவெடுத்த அவர் விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டும் இருக்கக்கூடாது என்ற நிலையை இந்திய அணியில் உருவாக்கினார்.

அதை விட அனுபவமற்ற கேப்டன்ஷிப் பதவியில் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்தி 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற அவருடைய தலைமையில் 2010ஆம் ஆண்டு இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறியது. அதைத் தொடர்ந்து கங்குலி உருவாக்கிய வீரர்களுடன் தோனி தலைமையில் 28 வருடங்கள் கழித்து இந்தியா 2011 உலகக் கோப்பையை வென்றது.

- Advertisement -

ரொனால்டோ – தோனி:
மேலும் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரெய்னா, அஸ்வின் ஜடேஜா போன்ற வீரர்களை வைத்து 2013 சாம்பியன் டிராபியையும் தோனி வென்றார். அதனால் உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள தோனி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

அப்படி பல்வேறு மகத்தான வெற்றிகளை பெற்று சாதனைகளை படைத்துள்ள தோனியை தமிழக ரசிகர்கள் தல என்று பாராட்டுவது வழக்கமாகும். அத்துடன் அவருடைய ஜெர்சியின் பின்புறத்தில் இருக்கும் 7 என்ற நம்பர் பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்த நம்பராக உள்ளது. அதன் காரணமாக கிரிக்கெட்டில் 7 என்ற நம்பரை சம்பந்தப்பட்ட விஷயங்கள் வந்தால் உடனடியாக அதற்கு “தல ஃபார் ரீசன்” என்று ரசிகர்கள் தோனியை பாராட்டுவது வழக்கம்.

- Advertisement -

சொல்லப்போனால் கிரிக்கெட்டை தாண்டியும் சில நேரங்களில் 7 என்ற நம்பருக்கு சம்பந்தமான விஷயம் வரும் போது அதற்கு தோனி தான் காரணம் என்று பாரட்டை சமூக வலைதளங்களில் அடிக்கடி பார்க்க முடியும். இந்நிலையில் 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நட்சத்திர ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுக்கல் அணியின் கேப்டனாக விளையாட உள்ளார்.

இதையும் படிங்க: முடிஞ்சா விராட் கோலியிடம் செஞ்சு காட்டுன்னு சவால் விட்டாங்க.. செஞ்சுருவேன் ஆனா.. ஹர்ஷித் ராணா பேட்டி

அதை பிரதிபலிப்பதற்காக கால்பந்து ஃபிபா உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் “தல ஃபார் ரீசன் 7” என்று தோனியை பாராட்டும் வார்த்தைகளை பயன்படுத்தி ரொனால்டோவை பாராட்டியுள்ளது. குறிப்பாக தோனியை போலவே ரொனால்டோவும் 7வது நம்பர் ஜெர்சி அணிந்து விளையாடுவதால் ஃபிபா இப்படி பாராட்டியுள்ளது. அதைப் பார்த்த தோனி ரசிகர்கள் தல புகழ் கால்பந்து உலகக் கோப்பை முதல் ரொனால்டோ வரை பரவியுள்ளதாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -