ஐ.பி.எல் 2021 ஏலம் : அடிப்படை விலையே 2 கோடியாக பதிவு செய்த சில வீரர்கள் – லிஸ்ட் இதோ

auction-1

14வது ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடிக்கு தங்கள் பெயரை பதிவு செய்துள்ள வீரர்கள் பற்றி பார்போம். 2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 வது ஐபிஎல் சீசனின் மினி ஏலத்தை பிப்ரவரி 18ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ipl trophy

இதனால் அனைத்து அணிகளும் தங்கள் அணியின் ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களின் பட்டியலையும் மோசமாக விளையாடியதால் வெளியேற்றப்படும் வீரர்களையும் அறிவித்திருக்கிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட வீரர்கள் அனைவரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் மினி ஏலத்தின் மூலம் மற்ற அணியில் தேர்வு செய்யப்படுவார்கள். இது போக இன்னும் வெளிநாட்டு வீரர்கள் சிலர் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்வதற்காக தங்களை பதிவு செய்து இருக்கின்றனர்.

இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 1097 வீரர்கள் பதிவு செய்திருக்கின்றனர். இதில் இந்திய வீரர்கள் 814 பேரும் வெளிநாட்டு வீரர்கள் 283 பேரும் பதிவு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யவில்லை. இந்த ஐபிஎல் ஏலத்தில் 19 கோடி வரை ஏலம் போக வாய்ப்பு இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கலந்துகொள்ளவில்லை.

Jadhav-2

அதேபோன்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், டாம் பென்டன் ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை. சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதுபோக சூதாட்டம் காரணமாக தடை செய்யப்பட்ட ஶ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், இந்திய டெஸ்ட் வீரர்கள் புஜாரா மற்றும் விஹாரி ஆகயோரும் இந்த ஏலத்திற்காக பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -

இதில் ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன், மொயின் அலி, சாம் பில்லிங்ஸ், பிளான்கட், ஜேசன் ராய், மார்க் வுட், கொலின் இங்க்ராம் ஆகியோர் தங்களது பெயரை அடிப்படை விலையாக 2 கோடிக்கு பதிவு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.