IND vs NZ : இந்திய அணிக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறுவோம். அந்த திட்டம் இதுதான் – பெர்குசன்

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது

Ferguson
- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது போட்டி 13ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

india

- Advertisement -

நியூசிலாந்து அணியும் இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இதனால் நாளைய இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான பெர்குசன் இந்தியாவை வீழ்த்தும் திட்டம் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் பெர்குசன் கூறியதாவது : இந்திய அணியின் துவக்க வீரர்கள் இந்திய அணிக்கு பெரும் பலத்தை சேர்க்கின்றார்கள். இந்நிலையில் தவான் காயம் காரணமாக விலகியதால் துவக்க வீரர்கள் மாறி விளையாடுவார்கள். இதனால் துவக்க வீரர்களை ஆரம்பத்திலேயே நாங்கள் விக்கெட் வீழ்த்தினால் பின்பு இந்திய அணியே எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். மேலும் இந்திய வீரர்கள் அனைவரும் பவுன்சர் பந்துகளுக்கு திணறுவார்கள்.

nz

மேலும் ட்ரண்ட் பிரிட்ஜ் மைதானம் பவுன்சர் பந்துவீசும் வகையில் ஏற்றவாறு உதவும் என்பதால் நாளைய போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அதிக அளவு பவுன்சர் பந்துகளை நாங்கள் பயன்படுத்த உள்ளோம். எங்களது இந்த திட்டம் மூலம் நிச்சயம் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை தகர்க்க முடியும். எனவே நாளைய போட்டியில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெறுவோம் என்று பெர்குசன் கூறினார். உலகக்கோப்பை தொடருக்கு முன் நடைபெற்ற பயிற்சி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement