இன்றைய போட்டியில் கெயிலை நிச்சயம் வீழ்த்தியே தீருவேன் – பெர்குசன்

Kkr
- Advertisement -

இன்று இரவு நடைபெறும் 6ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்க உள்ளது.

Kxip

- Advertisement -

இதற்காக இரு அணி வீரர்களும் கொல்கத்தா மைதானத்தில் இன்று தீவிர பயிற்சியினை மேற்கொண்டனர். இந்த பயிற்சிக்கு பிறகு கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுக்கி பெர்குசன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்தார்.

அதில் பெர்குசன் கூறியதாவது : சமீபத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும், ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியிலும் கூட கெயில் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும், இதுபோன்ற டி20 கிரிக்கெட் வடிவில் உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன் கெயில் தான். ஏனெனில், எந்த நேரத்திலும் அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றும் தன்மை கொண்டவர்.

gayle

ஆகையால் இன்றைய போட்டியில் அவரை விரைவில் வீழ்த்த திட்டம் வைத்துளோம். அதன்படி முதலில் அவரை நெருக்கடிக்கு உள்ளாக்கி பிறகு அவரை சரியான நேரத்தில் இன்று வீழ்த்துவோம் என்று பெர்குசன் தெரிவித்தார். பெர்குசன் நியூசிலாந்து அணிக்காக தேசிய அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement