ஆஸ்திரேலிய வீரரை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நியூசி வீரர் – வெளியான அதிர்ச்சி தகவல்

Nz
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் மூடிய நிலையில் நடைபெற்றது. இதனால் ரசிகர்கள் ஒருவர்கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்த அனுபவம் மிக வித்தியாசமாக இருந்தது.

- Advertisement -

ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் தொண்டை பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக அசவுகரியத்தை உணர்ந்தார். இந்நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்டில் அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து வீரர் பெர்குசன் தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் திடீரென இவருக்கு உடல்நலக்குறைவானதால் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் அவருக்கு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது .

Ferguson

அதனை தாண்டி கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சரட்சனுக்கு உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை கொடுக்கப்பட்டது.
கரோனா வைரஸ் பரிசோதனையும் செய்யப்பட்டது. அவருக்கு வைரஸ் இல்லை என்று உறுதி செய்யப்பட்டு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து வீரருக்கு இவ்வாறு நடந்துள்ளதால் நியூசிலாந்து வீரர்கள் சற்று அச்சத்தில் உள்ளனர். மேலும் அவருக்கான டெஸ்ட் எடுக்கப்பட்டு அந்த முடிவுகள் வெளியாகும் வரை அவர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

corona

உலகெங்கும் இந்த வைரஸ் பாதிப்பால் பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இந்த கொரோனா பாதிப்பினால் இந்தியாவில் நடைபெற இருந்த மிகப்பெரிய தொடரான ஐ.பி.எல் தொடரும் ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement