சென்னைக்கு வர எனக்கு வித்தியாசமா இருக்கு…தினேஷ் கார்த்திக் – ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா ?

dinesh1

இன்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக கொல்கத்தா அணி கேப்டனான சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக் சென்னை வந்தடைந்துள்ளார்.இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தனது இரண்டாவது லீக்கில் வலுவான கொல்கத்தா அணியை எதிர்கொள்கின்றது.

kkr5

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தோனி தலைமையிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தினேஷ் கார்த்திக் தலைமையிலும் களம் இறங்குகின்றன. இரண்டாடுகளுக்கு பின்னர் சென்னை அணி தனது சொந்த மண்ணில் பல்வேறு இடர்களுக்கு இடையில் இன்றைய போட்டியில் களமிறங்குவதால் ரசிகர்களிடையே பல மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை வந்தடைந்தனர்.இதுபற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள தினேஷ் கார்த்திக் “சென்னை வழக்கத்தை விட இந்தமுறை வித்தியாசமாக தோற்றமளிக்கின்றது எனக்கு.என்னைச்சுற்றி பலத்த பாதுகப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. என்று எழுதியுள்ளார்.

அந்த டிவீட்டில் பலரும் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவாகவும், சிலர் கேள்விகளையும் எழுப்பி வருகின்னறனர்.ஒரு ரசிகர் “தமிழன் தமிழ் மண்ணில் விளையாடவே பாதுகாப்பா” என்றும் மற்றொரு ரசிகர் “நீங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆதரவளிப்பீர்களா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.தற்போது தினேஷ் கார்த்திக்கின் டிவீட் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

Advertisement