ஐ.பி.எல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 5 அதிவேக அரைசதங்கள். இதுல 3 ரெக்கார்ட் நம்ம ஆளுங்க செய்ஞ்சது – லிஸ்ட் இதோ

rainashot

ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்தான் நிறைந்திருக்கும். எப்போதும் போல் ஒவ்வொரு வருடமும் புதிய புதிய சாதனைகளை பேட்ஸ்மேன்கள் படைத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி அதிவேகமாக ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட அரைசதங்கள் பற்றி தற்போது பார்ப்போம்.

Gayle

கிறிஸ் கெய்ல் (17 பந்துகளில் 50 ரன்கள், 2013) :

இந்த யுனிவர்சல் பாஸ் 2013ம் ஆண்டு பூனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 66 பந்தில் 175 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் 17 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார்.

Raina

சுரேஷ் ரெய்னா (16 பந்துகளில் 50 ரன்கள், 2014) :

- Advertisement -

சிஎஸ்கே அணியின் மூன்றாம் நிலை வீரரான இவர் யாரும் எதிர்பாராத வகையில் 2014-ம் ஆண்டு அதிரடியாக விளையாடினார். 226 ரன்கள் சிஎஸ்கே அணி அடிக்க வேண்டி இருந்தது. அப்போது திடீரென வந்த சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் 50 ரன் விளாசி அதிரடியாக விளையாடினார். இதில் 6 சிக்சர்கள் 7 பவுண்டரிகளும் அடங்கும் இறுதியாக 25 பந்துகளில் 87 ரன் குவித்து இருந்தார் சுரேஷ் ரெய்னா.

Narine

சுனில் நரைன் (ஆர்சிபி,க்கு எதிராக 15 பந்துகளில் 50) :

கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரராக களம் இறங்கினார் சுனில் நரேன். 2017 ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார் இதில் 6 சிக்ஸர் 5 பவுண்டரி அடங்கும்.

yusuf

யூசுப் பதான் (எஸ்.ஆர்.எச், க்கு எதிராக 15 பந்துகளில் 50 :

யூசுஃப் பதான் 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக கடந்த 15 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். இந்த போட்டியில் வெறும் 22 பந்துகளில் 72 அடித்திருந்தார் யூசப் பதான்.

Rahul

கே.எல்.ராகுல் (டி.சி., 2018 க்கு எதிராக 14 பந்துகளில் 50) :

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 2018 ஆம் ஆண்டு ஆடிய கேஎல் ராகுல் டெல்லி கேப்பிடல் அணிக்கெதிராக ருத்ரதாண்டவம் ஆடினார். இதன் காரணமாக வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும்.