6 பந்தில் 6 சிக்ஸ். 25 பந்தில் அதிரடி சதம். கெயிலை மிஞ்சிய இங்கிலாந்து வீரர்- வீடியோ

Will-Jacks
- Advertisement -

துபாயில் நடைபெற்று வரும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 20 வயது இளம் வீரரான வில் ஜாக்ஸ் 25 பந்தில் சதமடித்து அசத்தினார். இவரது அதிரடி மூலம் இன்று உலகஅளவில் இவர் வைரலாகியுள்ளார் வில் ஜாக்ஸ். 10 ஓவர்கள் முடிவில் வில் ஜாக்ஸ் 30 பந்துகள் 105 ரன்களை குவித்தார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

வில் ஜாக்ஸ் 11 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 105 ரன்களை குவித்தார். அவருடைய அணி 10 ஓவர்களில் 176 ரன்களை குவித்தது. இந்த போட்டி குறித்து ஆட்டம் முடிந்து பேசிய வில் ஜாக்ஸ் கூறியதாவது :

இந்த போட்டியில் நான் சில பந்துகளை எதிர்கொண்ட போதே நான் அனைத்து பந்தினையும் சிக்ஸர் அடிக்க முடிவு செய்தேன். அதனாலே இந்த போட்டியில் என்னால் 6 பந்தில் 6 சிக்ஸர்கள் அடிக்க முடிந்தது. மேலும் இந்த போட்டியில் நான் பவுண்டரி அடிக்க விரும்பவில்லை. இருப்பினும் 8 பவுண்டரிகள் அடித்தேன் என்று கூறினார்.

இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான க்றிஸ் கெயில் 30 பந்துகளில் 100 ரன்களை ஐபில் தொடரில் அடித்ததே இதற்கு முந்தய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement