
ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் அடித்த வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அதிலும் மொத்தமாக எண்ணிப்பார்த்தால் 5 வீரர்களுக்கு உள்ளாகத் தான் இருப்பார்கள். ஆனால் தற்போது விதிகள் மாற்றப்பட்ட நிலையில் இந்தியாவில் மட்டுமே பத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் 10 ஆயிரம் ரன்களை விளாசியுள்ளார். தற்போது பத்தாயிரம் ரன்களை ஒருநாள் போட்டிகளில் விளையாட குறைந்த போட்டிகள் எடுத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை பார்ப்போம்
.
விராட் கோலி – 205 ஆட்டங்கள் :
இந்த காலத்தில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் இவர். ஒருநாள் போட்டிகளில் சராசரி 60 வைத்திருக்கிறார். 31 வயதான இவர் வெறும் 205 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி 10000 ரன்கள். என்ற சாதனையைக் கடந்தார் இதன் மூலம் இவர் இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் – 259 ஆட்டங்கள் :
விராட் கோலி இவரது சாதனையை எல்லாம் முறியடித்து விடுவார் போலிருக்கிறது, ஆம் சச்சின் டென்டுல்கர் விராத் கோலியை விட 54 ஆட்டங்களில் அதிகமாக ஆடித்தான் 10000 ரன்கள் என்ற இடத்தை கடந்துள்ளார். இவர் மொத்தம் 259 ஆட்டங்களில் ஆடி 10 ஆயிரம் ரன்களை அடித்துள்ளார் .10 ஆயிரம் ரன்களை அடிக்க அவருக்கு 11 வருடங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.
சௌரவ் கங்குலி – 263 :
இந்திய அணியின் கேப்டனாக இருந்த இவர் தற்போது பிசிசிஐயின் தலைவராக இருக்கிறார். இடதுகையில் அதிரடியாக ஆடுவதில் வல்லவர். இவர் 10 ஆயிரம் ரன்கள் விளாச 263 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு 13 வருடங்கள் ஆனது தனி விஷயம்.
ரிக்கி பாண்டிங் – 266 :
ஆஸ்திரேலிய அணி ஜாம்பவானாக திகழ்ந்த காலகட்டத்தில் இவர்தான் அந்த அணியின் கேப்டனாக இருந்தார். 375 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 13,704 ரன்கள் குவித்துள்ளார். அதே நேரத்தில் இவர் 10 ஆயிரம் ரன்கள் எடுக்க 266 ஆட்டங்களை எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 12 வருடங்கள் எடுத்துள்ளது.
ஜாக் காலிஸ் – 272 :
கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்று இவரைக் கூறலாம். இவரால் பேட்டிங் பிடிக்க முடியும் பந்து வீச முடியும் பீல்டிங் செய்ய முடியும் .18 வருடங்கள் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடியவர் 272 ஆட்டங்களில் ஆடிய 10 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார். இவருக்கு இதனை செய்ய 13 வருடங்கள் ஆகியுள்ளது.