இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மூன்று வகையான இந்திய அணியிலும் முக்கிய வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார். அண்மை காலமாகவே காயத்தால் அதிகளவு பாதிப்பை சந்தித்த அவர் பணிச்சுமையை காரணம் காட்டி தற்போது முக்கிய தொடர்களில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார். அந்த வகையில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அவர் முக்கியமான போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
ஜஸ்ப்ரீத் பும்ரா அப்படியே வாசிம் அக்ரமை பிரதிபலிக்கிறார் : பர்வேஸ் மஹரூப்
இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அசத்தலாக செயல்படும் ஜஸ்ப்ரீத் பும்ராவை முன்னாள் பாகிஸ்தான் கேப்டனான வசீம் அக்ரமுடன் ஒப்பிட்டு இலங்கை அணியின் முன்னாள் வீரரான பர்வேஸ் மஃஹரூப் பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
ஜஸ்ப்ரீத் பும்ரா மூன்று வகையான போட்டிகளிலும் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக திகழ்கிறார். அதற்கு அவருடைய வித்தியாசமான பௌலிங் ஆக்சனை மிக முக்கியமான காரணமாக பார்க்கிறேன். கடந்த 2013-14 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நான் முதன் முறையாக பும்ராவை சந்தித்தது நியாபகம் இருக்கிறது.
அப்போது நான் பார்த்த பும்ராவிற்கும் இப்போது பார்க்கும் பும்ராவிற்கும் பல்வேறு மாற்றங்கள் இருக்கின்றன. அதோடு தற்போது மிகப்பெரிய வீரராக அவர் வளர்ந்து நிற்கிறார். நான் பார்த்த போது அவர் இன்ஸ்விங் பந்துகளை மட்டுமே வீசி வந்தார். ஆனால் தற்போது அவுட் ஸ்விங் பந்துகள், யார்க்கர், ஸ்லோ பால் என பல்வேறு வேறியேஷன்களை வைத்துள்ளார்.
அதன் காரணமாகவே உலகில் உள்ள 90% பேட்ஸ்மன்களுக்கு அவர் கடினமான பவுலராக மாறியுள்ளார். அவரது பந்துவீச்சை எந்த ஒரு பேட்ஸ்மனும் எளிதாக விளையாட முடியாது என்கிற அளவு கடினமான பந்துவீச்சாளராகவே திகழ்ந்து வருகிறார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் அவருடைய ப்ரைம் பார்மில் பந்துவீசிய போது எந்தவொரு பேட்ஸ்மேனும் அவருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
இதையும் படிங்க : 3 வருஷத்துல 3 ஆப்ரேஷன்.. தற்போது காயத்தின் நிலவரம் என்ன ? முக்கிய அப்டேட்டை வழங்கிய – சூரியகுமார் யாதவ்
அந்த அளவிற்கு தற்போது பும்ராவும் ப்ரைம் பார்மில் இருக்கிறார். அவ்வப்போது பும்ரா காயத்தால் பாதிக்கப்படுவதால் பின்னடைவை சந்தித்தாலும் மீண்டும் கம்பேக் கொடுக்கும் போதெல்லாம் அசத்துகிறார். இன்னும் சில ஆண்டுகள் அவர் இதேபோன்று சிறப்பான செயல்பாட்டை நிச்சயம் வெளிப்படுத்துவார் என்று தான் நம்புவதாக பர்வேஸ் மஹரூப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



