ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை தொட்டுள்ளது. அந்தத் தொடரில் ஜூன் 1ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற குவாலிஃபயர் 2 போட்டியில் மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 204 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய பஞ்சாப் 19 ஓவரிலேயே 206/5 ரன்களை வைத்து எளிதாக வெற்றி பெற்றது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பிரயாஸ் ஐயர் 87* ரன்கள் அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியால் பஞ்சாப் 11 வருடங்கள் கழித்து ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது. மறுபுறம் போராடித் தோற்ற மும்பை தொடரிலிருந்து வெளியேறியது.
கேவலமான வர்ணன:
முன்னதாக அந்தப் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த பஞ்சாப்புக்கு துவக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யா அடித்து நொறுக்கி 20 (10) ரன்கள் குவித்து அவுடடானார். அதன் பின் கொஞ்சம் தடுமாறிய பஞ்சாப் ஸ்ரேயாஸ் ஐயர், ஜோஸ் இங்லிஷ், நேஹல் வதேரா ஆகியோருடைய அதிரடியால் வெற்றி பெற்றது. இறுதியில் அப்போட்டியின் முடிவு பற்றி முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்திக் நேரலையில் வர்ணனை செய்தார்.
அப்போது “பிரியான்ஸ் ஆர்யா மறைவுக்குப் பின் பஞ்சாப் பேட்டிங்கில் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி கண்டது” என்று அவர் வர்ணித்தார். அதாவது ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்து பிரியன்ஸ் ஆர்யா இறந்த பின் பஞ்சாப் சிறப்பாக கம்பேக் கொடுத்து வென்றதாக முரளி கார்த்திக் வர்ணித்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் இதை விட ஒரு கேவலமான மோசமான வர்ணணையைப் கேட்க முடியாது என்று சமூகவலைதளங்களில் கொந்தளிக்கின்றனர்.
தடை செய்ங்க:
மேலும் பிரியான்ஸ் ஆர்யா களத்தில் தம்முடைய விக்கெட்டை இழந்தாரே தவிர தனது உயிரை விடவில்லை என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி இருக்க எப்படி நீங்கள் அவர் மறைந்து விட்டார் என்று சொல்லலாம்? என ரசிகர்கள் முரளி கார்த்திக்கை விளாசுகிறார்கள். அத்துடன் முரளி கார்த்திக் எப்போதுமே ரசிக்கும் அளவுக்கு வர்ணனை செய்வதில்லை என்றும் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஒருநாள் போட்டிகளில் இருந்து அதிரடியாக ஓய்வை அறிவித்த கிளென் மேக்ஸ்வெல்.. காரணம் என்ன? – விவரம் இதோ
எனவே முரளி கார்த்திக் போன்ற மோசமான வர்ணனையாளர்களை ஐபிஎல் தொடரில் வர்ணனை செய்வதிலிருந்து பிசிசிஐ தடை செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இதற்கு முன் ஒருதலைப் பட்சமாக வர்ணனை செய்ததால் முன்னாள் வீரர் இர்பான் பதான் நடப்பு ஐபிஎல் சீசனில் வர்ணனையாளராக செயல்படத் தடை பெற்றார். அதே போல முரளி கார்த்திக்கையும் தடை செய்யுமாறு ரசிகர்கள் கேட்கின்றனர்.



