IND vs BAN : எங்களால இதையெல்லாம் பார்க்க முடில, பேசாம நீங்களே ரிட்டையர் ஆகிடுங்க – சீனியர் வீரருக்கு ரசிகர்கள் கோரிக்கை

dhawan
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த இந்தியா டிசம்பர் 7ஆம் தேதியான்று நடைபெற்ற 2வது போட்டியிலும் 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. டாக்காவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஒரு கட்டத்தில் 69/5 என திணறியது. அப்போது மீண்டும் அஜாக்கிரதையாக செயல்பட்ட இந்தியாவை 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்தாடிய முகமதுல்லா 77 ரன்களும் மெஹதி ஹசன் சதமடித்து 100* (83) ரன்களும் எடுத்ததால் 50 ஓவர்களில் வங்கதேசம் 271/7 ரன்கள் குவித்து மிரட்டியது.

அதை தொடர்ந்து 272 ரன்களைத் துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா காயமடைந்த நிலையில் விராட் கோலி 5, ஷிகர் தவான், சுந்தர் 11, ராகுல் 14 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். இருப்பினும் 5வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்களும் அக்சர் படேல் 56 ரன்களும் குவித்து முக்கிய நேரத்தில் அவுட்டானார்கள். கடைசியில் வேறு வழியின்றி காயத்துடன் களமிறங்கிய ரோகித் சர்மா முழு மூச்சுடன் 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் விளாசி 51* (28) ரன்கள் எடுத்த போதிலும் டெயில் எண்டர்கள் கை கொடுக்கத் தவறியதால் 50 ஓவர்களில் 266/9 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

ரிட்டையர் ஆகிடுங்க:
அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்றியுள்ள வங்கதேசம் சொந்த மண்ணில் நாங்கள் புலி என்பதை நிரூபித்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் ரோகித் சர்மா காயமடைந்த நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் வழக்கம் போல தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 8 (10) ரன்களில் அவுட்டானது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக நீண்ட நாட்கள் கழித்து தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 5 ரன்களில் அவுட்டானது தெரிந்து விட்டதால் பாரத்தை சுமக்க வேண்டிய அவர் அடுத்த ஓவரிலேயே பெவிலியன் திரும்பியது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

கடந்த 2013இல் முன்னாள் கேப்டன் தோனி அறிமுகப்படுத்திய ஓப்பனிங் ஜோடியின் ரோகித் சர்மாவின் பார்ட்னராக அவதரித்த ஷிகர் தவான் அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்று இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதன்பின் 2015 – 2019 வரையிலான காலகட்டங்களில் 2018 ஆசியக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற அவர் இந்தியா கோப்பை வெல்ல உதவியது உட்பட அழுத்தமான பெரிய தொடர்களில் அட்டகாசமாக செயல்பட்டார். அதனால் ரசிகர்களால் மிஸ்டர் ஐசிசி என்று கொண்டாடப்படும் அவர் 2019 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாக்கு எதிரான போட்டியில் காயத்துடன் சதமடித்து வெளியேறிய போது வாய்ப்பு பெற்ற கேஎல் ராகுல் அவரை விட சிறப்பாக செயல்பட்டு அவரது இடத்தை தனதாக்கி விட்டார்.

- Advertisement -

அதன் பின் காயத்திலிருந்து குணமடைந்த ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் பெரிய ரன்களை குவித்தாலும் அதை அதிரடியாக எடுக்க முடியாமல் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்ததார். அத்துடன் 35 வயதை கடந்து விட்டதால் அவருக்கு பதில் ராகுலை ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக மாற்றிய இந்திய அணி நிர்வாகம் இதற்கு முன் ஆற்றிய பங்கிற்காக மட்டும் ஜிம்பாப்பே போன்ற 2வது தர தொடர்களில் கேப்டனாக வாய்ப்பு கொடுத்து அடுத்த தொடரிலேயே கழற்றி விட்டு வருகிறது.

இருப்பினும் சமீப காலங்களில் ராகுல் சொதப்பலாக செயல்பட்டதால் தவானுக்கு 2023 உலக கோப்பையில் வாய்ப்பு கொடுக்கலாம் என்ற கருத்து பரவலாக இருந்தது. ஆனால் பெரும்பாலும் சொதப்புவது அல்லது பெரிய ரன்களை எடுத்தாலும் அதை ஆமை வேகத்தில் எடுக்கும் அவர் இந்த வங்கதேச தொடரில் அடுத்தடுத்து மோசமாக செயல்பட்டதால் மிஸ்டர் ஐசிசி என்று கௌரவத்துடன் இப்போதே ஓய்வு பெற்று விடுமாறு நிறைய ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.  ஏனெனில் வங்கதேசத்திடமே திணறும் நீங்கள் தரமான வீரர் என்றாலும் காலம் கடந்து விட்டதால் உலகக்கோப்பையில் நிச்சயமாக அசத்தப்போவதில்லை என்று வேதனை தெரிவிக்கும் ரசிகர்கள் அடுத்த தலைமுறைக்கு வழி விடுமாறு கோரிக்கை வைக்கிறார்கள்.

Advertisement