IND vs NZ : இந்தியா பெரிய ஸ்கோர் குவிப்பு – ஆனாலும் அவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என நட்சத்திர வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

Suryakumar rohit sharma
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலைமையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசிப் போட்டி ஜனவரி 24ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கியது. அதில் குறைந்தபட்சம் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கும் சுப்மன் கில் – ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கு சாதகமாக இருந்த மைதானத்தில் சுமாராக பந்து வீசிய நியூஸிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ஆரம்பம் முதலே விரைவாக ரன்களை சேர்த்தனர். நேரம் செல்ல செல்ல நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட இந்த ஜோடி 212 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த போது கேப்டன் ரோகித் சர்மா 507 நாட்கள் கழித்து சதமடித்து 9 பவுண்டரி 6 சிக்சருடன் 101 (85) ரன்கள் விளாசி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து அவுட்டானார்.

- Advertisement -

சரிப்பட்டு வரமாட்டார்:
அவருடன் மறுபுறம் அசத்திய சுப்மன் கில் 13 பவுண்டரி 5 சிக்ஸருடன் சதமடித்து 112 (78) ரன்கள் குவித்து அவுட்டான நிலையில் அடுத்து வந்த இஷான் கிசான் தடவலாக செயல்பட்டு 17 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் அதிரடி காட்ட முயன்ற விராட் கோலி 3 பவுண்டரி 1 சிக்சடன் 36 (27) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் பெரிதும் பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் 2 சிக்ஸருடன் 14 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 9 (14) ரன்களில் அவுட்டானாலும் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 3 பவுண்டரி 3 சிக்சருடன் 54 (38) ரன்களும் ஷார்துல் தாகூர் 25 (17) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதனால் 50 ஓவர்களில் இந்தியா 385/9 என்ற பெரிய ரன்களை குவித்த நிலையில் சுமாராக செயல்பட்ட நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டூபி மற்றும் டிக்ஃனர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக இப்போட்டியில் கொஞ்சம் கூட அழுத்தம் இல்லாத சூழ்நிலையில் ஏற்கனவே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்த சமயத்தில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் வெறும் 14 (9) ரன்களில் அவுட்டானது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

- Advertisement -

ஏனெனில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் மைதானத்தில் நாலாபுறங்களிலும் பவுண்டரிகளை பறக்க விடும் அவர் பெரிய ரன்களைக் குவித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ளார். குறிப்பாக கடந்த 2 வருடங்களாக விராட் கோலி உள்ளிட்ட இதர வீரர்களை மிஞ்சி உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் அவர் குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறியுள்ளார்.

ஆனால் இந்தியாவின் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கொண்டாடப்படும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் ஆரம்பம் முதலே தடுமாற்றமான செயல்பாடுகளையே வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் 180க்கும் மேற்பட்ட கேரியர் ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ள அவர் அதற்குள் அசால்டாக 3 சதங்களை அடித்துள்ளார். ஆனால் வேகத்துக்கும் பொறுமைக்கும் இடைப்பட்ட கிரிக்கெட்டான ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காத அவர் 20 போட்டிகளில் 433 ரன்களை 28.87 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக கடந்த 10 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் வெறும் 139 ரன்களை 15.44 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ளார். அதனால் சமீப காலங்களாகவே இவர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டாரோ என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன.

இதையும் படிங்க: வீடியோ : ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசிய சுப்மன் கில், ரோஹித் வியப்பு – சதமடித்து ஷிகர் தவானின் சாதனையை தகர்ப்பு

அந்த நிலையில் அழுத்தம் கொஞ்சம் கூட இல்லாத சமயத்தில் பேட்டிங்க்கு சாதகமாகவும் அளவில் சிறிய பவுண்டரிகளையும் கொண்ட இந்த மைதானத்தில் மீண்டும் சொதப்பலாக ஆட்டமிழந்த அவர் நிச்சயமாக ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்றும் சூர்யகுமார் யாதவ் என்றும் டி20 வீரர் மட்டுமே என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆதங்கத்துடன் கிண்டலடித்து வருகிறார்கள்.

Advertisement