இன்னுமா நீங்க முன்னேறல.. அடுத்தடுத்த பழைய பஞ்சாங்க சொதப்பலை அரங்கேற்றிய ஷ்ரேயாஸ்

Shreyas Iyer
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 29ஆம் தேதி லக்னோ நகரில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின. அந்த போட்டியில் ஏற்கனவே 4 தோல்விகளை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட நழுவ விட்ட இங்கிலாந்து தங்களுடைய பலத்தை காட்டும் முனைப்புடன் களமிறங்கியது.

அந்த நிலைமையில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக 6வது வெற்றியை பதிவு செய்யும் முறைப்படும் களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே சுப்மன் கில் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதை விட அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி உலகக் கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் இந்தியாவுக்கு பின்னடைவையும் ஏற்படுத்தினார்.

- Advertisement -

இன்னுமா முன்னேறல:
இந்த சூழ்நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரோகித் சர்மாவுடன் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 16 பந்துகளை எதிர்கொண்ட அவரும் 4 ரன்களில் அவுட்டாகி இந்தியாவுக்கு மற்றுமொரு சறுக்கலை கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதை விட அவர் அவுட்டான விதம் தான் ரசிகர்களை கடுப்பாக வைக்கிறது என்றே சொல்லலாம்.

ஏனெனில் கடந்த 2017இல் அறிமுகமான அவர் எப்போதுமே சுழல் பந்து வீச்சாளர்களை பாரமாக எதிர்கொண்டு வருகிறார். ஆனாலும் உயரமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளை சரியாக எதிர்கொள்ள தடுமாறிய அவர் கேட்ச் கொடுத்து அவுட்டாவதை வழக்கமாக வைத்திருந்தார். அதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் என்றாலே தரமான ஷார்ட் பிட்ச் பந்தை போட்டால் வலையில் எலி போல் சிக்கி விடுவார் என்பது உலக அணிகளுக்கு அம்பலமானது.

- Advertisement -

அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக 2022இல் நடைபெற்ற ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியில் பால்கனியில் அமர்ந்து கொண்டே பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து அணியினருக்கு ஷார்ட் பிட்ச் போடுமாறு சொல்லி ஷ்ரேயாஸ் ஐயரை அவுட்டாக்கியதை மறக்கவே முடியாது. அதனால் விரைவில் ஷார்ட் பந்துகளை எதிர்கொள்ள தேவையான வேலைகளை செய்யுங்கள் என்று ஸ்காட் ஸ்டைரிஸ், வாசிம் ஜாபர் போன்ற முன்னாள் வீரர்களும் விமர்சித்திருந்தனர்.

இதையும் படிங்க: உ.கோ வரலாற்றில் முதல் முறையாக சறுக்கிய விராட் கோலி.. சச்சினின் மோசமான சாதனை சமன்

ஆனால் அதன் பின் காயத்திலிருந்து குணமடைந்து வந்த அவர் நியூலிலாந்து எதிரான கடந்த போட்டியில் ஷார்ட் பிட்ச் பந்தில் அவுட்டானதை போலவே இப்போட்டியில் கிறிஸ் ஓக்ஸ் விரித்த வலையில் கேட்ச் கொடுத்து அதே பழைய பஞ்சாங்க சொதப்பலை அரங்கேற்றியுள்ளது ரசிகர்களை கோபமடைய வைக்கிறது. இந்த நிலைமையில் ராகுலும் 39 ரன்னில் அவுட்டானதால் சற்று முன் வரை 30 ஓவரில் 131/4 ரன்களுடன் தடுமாறும் இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் 79* ரன்களில் போராடி வருகிறார்.

Advertisement