IND vs WI : இன்னுமா அவர நம்பிகிட்டு இருக்கீங்க, டி20யில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய முக்கிய வீரரை நீக்ககோரும் ரசிகர்கள்

Shreyas Iyer IND vs WI
Advertisement

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆகஸ்ட் 2-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164/5 ரன்கள் சேர்த்தது. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் 57 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த வெஸ்ட் இண்டீசுக்கு தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 20 (20) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் 22 (23) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் இந்திய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 8 பவுண்டரி 4 சிக்சர்கள் பறக்கவிட்ட மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 73 (50) ரன்களை விளாசினார்.

Avesh Khan

இறுதியில் ரோவ்மன் போவல் 23 (14) ரன்களும் சிம்ரோன் ஹெட்மையர் 20 (20) ரன்களும் எடுத்து ஓரளவு நல்ல பினிஷிங் கொடுத்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 11* (5) ரன்கள் எடுத்திருந்தபோது காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்டாகி சென்றார். அதனால் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு மறுபுறம் நங்கூரமாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:
அவருடன் மெதுவாக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 24 (27) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்ட சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 76 (44) ரன்களை வெளுத்து வாங்கி வெற்றியை உறுதிசெய்து ஆட்டமிழந்தார். அதனால் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 4 ரன்களில் அவுட்டானாலும் இறுதியில் ரிஷப் பண்ட் 33* (26) ரன்களும் தீபக் ஹூடா 10* (7) ரன்களும் எடுத்து தேவையான பினிஷிங் கொடுத்தனர்.

அதன் காரணமாக 19 ஓவரிலேயே 165/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் 2 போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருந்த இத்தொடரில் மீண்டும் 2 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 76 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். ஆனால் அவருடன் வெறும் பெயருக்காக கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த ஷ்ரேயஸ் ஐயர் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

- Advertisement -

டெஸ்ட் இன்னிங்ஸ்:
குறிப்பாக ரோகித் சர்மா காயத்தால் வெளியேறியதும் சூர்ய குமாருடன் ஜோடி சேர்ந்த அவர் மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி வெற்றியை உறுதி செய்தாலும் ஆரம்பத்தில் நிதானத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் ஒரு கட்டத்துக்கு பின் அதிரடியை தொடங்கினார்.

- Advertisement -

ஆனால் கடைசி வரை அதிரடியே காட்டாமல் 27 பந்துகளை சந்தித்து வெறும் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களை 88.89 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் முக்கிய நேரத்தில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானது சூரியகுமாரின் அற்புதமான ஆட்டத்தால் இந்தியாவுக்கு தோல்வியை கொடுக்காமல் தப்பிக்க வைத்தது.

இது மட்டுமல்லாமல் சமீபத்திய இங்கிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டியிலும் இதேபோல் 31/3 என இந்தியா தடுமாறிய போது சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த இவர் 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதில் ஒரு கட்டத்துக்கு பின் எரிமலையாக வெடித்த சூர்யகுமார் யாதவ் 117 (55) ரன்களை தெறிக்கவிட்டு வெற்றிக்காக போராடினார். ஆனால் கடைசிவரை அதிரடியே காட்டாமல் வெறும் பெயருக்காக 28 (23) ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் அய்யர் அன்றைய நாளில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
அதன் காரணமாகவே இவருக்கு பதில் சமீபத்திய அயர்லாந்து டி20 மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்களில் அசத்திய சஞ்சு சாம்சன், தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பளிக்குமாறு நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் அதை காதில் வாங்காத அணி நிர்வாகம் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக மட்டும் சூரனாகவும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஷ்ரேயஸ் ஐயர் தடுமாறுவார் எனத் தெரிந்தும் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது.

இதையும் படிங்க: IND vs WI : இந்தியாவின் ஏபிடி – எப்பா என்னா பேட்டிங், ஓப்பனிங்லயும் சாதித்த சூர்யாவை பார்த்து வியக்கும் ரசிகர்கள், வீடியோ உள்ளே

ஆனால் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட தவறி வரும் அவர் அதிரடியும் காட்டாமல் விரைவில் அவுட்டும் ஆகாமல் இப்படி டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதனால் அதிருப்தியடைந்து கலாய்க்கும் ரசிகர்கள் இன்னுமா இவரை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறுவதுடன் டி20 கிரிக்கெட்டுக்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார் என்ற கருத்துடன் அணியிலிருந்து நீக்குமாறு கேட்கிறார்கள்.

Advertisement