உலக கோப்பைக்கு இவரை நம்புவதும் வேஸ்ட் – 15 வருடங்கள் கழித்து மோசமான சாதனை படைத்த தவான், ரசிகர்கள் அதிருப்தி

Shikhar-Dhawan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுத்த அந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் மழைக்கு மத்தியில சிறப்பாக செயல்பட்டு 1 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்ற இளம் இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதே மழைக்கு மத்தியில் சுமாராக செயல்பட்டு 1 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

வரும் 2023இல் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தின் முதல் படியாக கருதப்படும் இத்தொடரில் விளையாடிய நிறைய இளம் வீரர்களுக்கு மத்தியில் ஒரே மூத்த வீரராக ஷிகர் தவான் கேப்டனாக விளையாடினார். 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தோனி உருவாக்கிய புதிய ஓப்பனிங் ஜோடியில் ரோகித் சர்மாவின் மானசீக பார்ட்னராக அசத்திய அவர் அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருதை வென்று கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்தார்.

- Advertisement -

தடுமாறும் தவான்:
அப்படியே வரிசையாக 2015, 2016, 2017, 2019 ஆகிய அடுத்தடுத்த உலகக்கோப்பை உட்பட வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த தொடக்க வீரராக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் அழுத்தமான பெரிய போட்டிகளில் அசத்துபராக இருந்ததால் ரசிகர்கள் மிஸ்டர் ஐசிசி என்று அழைக்கிறார்கள். இருப்பினும் 2019 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து வெளியேறிய அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற கேஎல் ராகுல் நாளடைவில் அவரை விட சிறப்பாக செயல்பட்டு அந்த இடத்தை தனதாக்கி விட்டார்.

அதனால் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் வந்த தவான் 36 வயதை கடந்து விட்டதால் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே போன்ற இரண்டாவது தர தொடர்களில் கேப்டனாக வாய்ப்பு கொடுக்கும் பிசிசிஐ அடுத்த தொடரிலேயே கழற்றி விட்டு வருகிறது. இருப்பினும் ஐபிஎல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அவர் இந்தியாவுக்காக இது போன்ற கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தலாக செயல்படுத்துகிறார். அதனால் சமீப காலங்களில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தும் ராகுலுக்கு பதிலாக 2023 உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவுடன் மீண்டும் தவான் விளையாட வேண்டும் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது.

- Advertisement -

ஆனால் 521, 618, 587, 460 என கடந்த 2019 முதல் ஐபிஎல் தொடரில் பெரிய ரன்களை குவிக்கும் அவர் முறையே 135.67, 144.73, 124.62, 122.67 என குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே போலவே இந்த வருடம் இதர இந்திய வீரர்களை காட்டிலும் அதிகபட்சமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 19 இன்னிங்ஸில் விளையாடியுள்ள அவர் 670 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த வீரராக அசத்தி வருகிறார்.

ஆனால் அதை வெறும் 75.11 என்ற இதர வீரர்களை காட்டிலும் மிகவும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15 வருடங்களுக்குப் பின் காலண்டர் வருடத்தில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய இந்திய வீரராக பரிதாப சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சௌரவ் கங்குலி : 71.93 (2007)
2. ரோஹித் சர்மா : 72.57 (2008)
3. கெளதம் கம்பீர் : 74.67 (2007)
4. ஷிகர் தவான் : 75.11 (2022)*

இந்த நியூசிலாந்து ஒருநாள் தொடரில் கூட முதல் போட்டியில் 72 (77) ரன்கள் குவித்த அவர் கடைசி 2 போட்டியில் 3 (10), 28 (45) என சுமாராகவே செயல்பட்டார். குறிப்பாக ஸ்ட்ரைக் ரேட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் ஆர்வம் இருந்தும் வயது காரணமாக பழைய பன்னீர்செல்வம் போல் மிரட்ட முடியாமல் தடுமாறும் இவர் 2023 உலகக்கோப்பையில் வாய்ப்பு பெற்றால் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவார் என்றுரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால் இவரை நம்புவதில் வேலையில்லை என்று தெரிவிக்கும் ரசிகர்கள் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பையில் மிரட்டும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement