- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கேப்டனாகும் முன்பே தற்பெருமை தேவையா? சச்சின், கோலி செய்யாத காரியத்தை செய்த கில்லை விளாசும் ரசிகர்கள்

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. முன்னதாக ரோகித் சர்மா ஓய்வுக்குப் பின் ஜஸ்ப்ரித் பும்ரா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அடிக்கடி காயத்தை சந்திப்பதால் அவருக்கு பதில் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இருப்பினும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் அவர் எப்போதுமே தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடியதில்லை. அதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே சுப்மன் கில் பொருத்தமற்றவர் என்று சேவாக் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அதே போல வெளிநாட்டில் சிறப்பாக விளையாடாத காரணத்தால் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டது பல ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

- Advertisement -

பேட்டில் பிரின்ஸ்:

இந்நிலையில் சுப்மன் கில் பொதுவாக ஃஎம்ஆர்எப் ஸ்பான்சர்ஷிப் கொண்ட பேட்டுகளை பயன்படுத்தி வருவதை அனைவரும் அறிவோம். கடந்த காலங்களில் சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா போன்ற ஜாம்பவான்களை ஃஎம்ஆர்எப் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. அவரைத் தொடர்ந்து விராட் கோலி அந்த நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் கொண்ட பேட்டுகளை பயன்படுத்தி வருகிறார்.

அதைப் பயன்படுத்தி அந்த ஜாம்பவான் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களுடைய நாட்டுக்கு நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். அதனால் அவர்களுடைய ஃஎம்ஆர்எப் பேட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சுப்மன் கில் தற்போது தம்முடைய ஃஎம்ஆர்எப் ஸ்பான்சர்ஷிப் கொண்ட பேட்டின் நடுவே பிரின்ஸ் என்ற பெயரை ஸ்பெஷலாக குறித்துள்ளார்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:

2021 முதல் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஓரளவு நன்றாக அசத்திய அவரை ஒரு தரப்பினர் இந்திய கிரிக்கெட்டின் பிரின்ஸ் என்று பாராட்டினர். அந்தப் பெயரை சுப்மன் கில் தற்போது தம்முடைய பேட்டில் நேரடியாகவே எழுதியுள்ளார். அந்தப் பெயரைக் கொண்ட பேட்டை வைத்து அவர் இங்கிலாந்து தொடரில் விளையாட உள்ளார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பும்ராவின் ரெக்கார்டை காலி செய்த காகிஸோ ரபாடா – விவரம் இதோ

இதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் கேப்டனாக முதல் போட்டியில் விளையாடுவதற்கு முன்பே இந்த தற்பெருமை தேவையா? என்று அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் பிரின்ஸ் என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரைன் லாரா கூட அந்தப் பெயரை தம்முடைய பேட்டில் பயன்படுத்தியதில்லை. அதே போல சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரும் லிட்டில் மாஸ்டர் அல்லது கிங் என்று தங்களுடைய பேட்டில் எழுதி இப்படி பெருமை பாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -