மும்பையின் தோல்விக்கு காரணம் அம்பயர் தான் ! கொந்தளிக்கும் ரசிகர்கள் – பாத்துட்டு நீங்களே சொல்லுங்க

ROhit Sharma MI vs KKR
- Advertisement -

மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பாராத திருப்பங்களை கொடுத்து வரும் நிலையில் மே 9-ஆம் தேதி நடைபெற்ற 56-வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய அணிகள் சந்தித்தன. அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு இம்முறை வெங்கடேஷ் ஐயர் மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் தொடக்க வீரர்களாக 60 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளமிட்டனர். அதில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர் 43 (24) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த ஒருசில ஓவர்களில் அஜிங்கிய ரஹானே 25 (24) ரன்களில் அவுட்டானர்.

MI vs KKR

- Advertisement -

அந்த சமயத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 6 (8) ஆண்ட்ரே ரசல் 9 (5) ஆகியோர் சீரான இடைவெளிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் அதை சமாளிக்கும் வகையில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் நிதிஷ் ராணா 43 (26) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களில் ரின்கு சிங் 23* (19) ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா 165/9 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக கடைசி நேரத்தில் பந்துவீச்சில் மிரட்டிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

மும்பை தோல்வி:
அதை தொடர்ந்து 166 என்ற நல்ல இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 (6) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த திலக் வர்மா 6 (5) ரமந்தீப் சிங் 12 (16) டிம் டேவிட் 13 (9) போன்ற வீரர்கள் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். அந்த சமயத்தில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் மறுபுறம் தொடக்க வீரராக களமிறங்கி போராடிக்கொண்டிருந்த இஷான் கிசனும் 51 (43) ரன்களில் ஆட்டமிழக்க மும்பையின் தோல்வி உறுதியானது. அந்த மோசமான நிலைமையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொல்லார்ட் 15 (16) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றியதாலும் எஞ்சிய அனைத்து வீரர்களும் அந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதாலும் 17.3 ஓவர்களில் ஆல் அவுட்டான மும்பை 113 ரன்களுக்கு சுருண்டது.

Pollard Mi

அதனால் 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கொல்கத்தா பங்கேற்ற 12 போட்டிகளில் 5-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்று வாய்ப்பை 90% தக்க வைத்துக் கொண்டது. அந்த அணிக்கு பட் கமின்ஸ் 3, ஆண்ட்ரே ரசல் 2 ஆகியோர் தேவையான விக்கெட்டுகளை எடுத்தனர். மறுபுறம் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பறிபோன நிலையில் பந்துவீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட மும்பை பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பியதால் பங்கேற்ற 11 போட்டிகளில் 9-வது தோல்வியை பதிவு செய்து கடைசி இடத்தை வலுவாகப் பிடித்துக் கொண்டது.

- Advertisement -

சர்ச்சை அவுட்:
முன்னதாக இந்த போட்டியில் 166 என்று சுலபமான இலக்கை துரத்திய மும்பைக்கு டிம் சௌதீ வீசிய முதல் ஓவரை ரோகித் சர்மா எதிர்கொண்டார். அதில் 2 ரன்களை எடுத்த அவர் அந்த ஓவரின் கடைசி பந்தை பவுண்டரி அடிக்க முயன்றபோதும் அது விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. ஆனால் அது பேட்டில் பட்டதாக உணர்ந்த கொல்கத்தா வீரர்கள் உடனடியாக அம்பயரிடம் அவுட் கேட்க அதை அவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இருப்பினும் அவுட் என உறுதியாக இருந்த கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ரிவியூ எடுத்தார்.

Rohit Sharma vs KKR

அதை தொடர்ந்து அந்த முடிவை பரிசீலனை செய்ய 3-வது அம்பையரை களத்திலிருந்த அம்பயர்கள் தொடர்பு கொண்டனர். அப்போது “அல்ட்ரா எட்ஜ்” தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சோதித்த போது அந்த பந்து பேட்டில் படுவதற்கு முன்பாகவே “ஸ்பைக்” காண்பித்தது அனைவரையும் குழப்பமடைய வைத்தது. ஆனால் ஸ்பைக் காண்பித்தது என்ற ஒரே காரணத்திற்காக எந்த யோசனையும் செய்யாத அம்பயர் அவுட் கொடுத்தது கொல்கத்தாவை தவிர எஞ்சிய அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

கொந்தளிக்கும் ரசிகர்கள்:
ஏனெனில் பந்து பேட்டில் படுவதற்கு ஒருசில இன்ச்கள் இடைவெளி இருக்கும் போதே ஸ்பைக் தோன்றியதுடன் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது பேட்டுக்கும் பந்துக்கும் இடைவெளி இருக்கும் போது ஸ்பைக் தோன்றியது தெளிவாக தெரிந்தது. அதனால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த ரோகித் சர்மா ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

ஒருவேளை அந்தத் தருணத்தின் போது பேட்ஸ்மேனின் ஜெர்ஸி உட்பட வேறு ஏதோ ஒரு பொருள் அசைந்ததால் கூட அந்த ஸ்பைக் தோன்றியிருக்கலாம் என்று கூறும் ரசிகர்கள் அது நிச்சயமாக அவுட் இல்லை என்று தற்போது சமூக வலைதளங்களில் அம்பயரை வறுத்தெடுத்து விடுகிறார்கள். மேலும் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இதுபோல் நிறைய குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தோல்விக்கு அம்பயரின் அந்த தவறான முடிவு தான் காரணம் என்று மும்பை ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள்.

Advertisement