இதுக்கு தான் இந்தியாவுக்கு விளையாடாம ஐபிஎல்’க்கு தயாரானீங்களா.. சொதப்பிய மும்பை வீரரை கலாய்த்த இந்திய ரசிகர்கள்

Ishan Kishan
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில் மும்பையை 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வீழ்த்தியது. அகமதாபாத் நகரில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் சாய் சுதர்சன் 46, கேப்டன் கில் 31 ரன்கள் எடுத்த உதவியுடன் 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய மும்பைக்கு ரோஹித் சர்மா 43, நமன் திர் 20, தேவாலட் ப்ரேவிஸ் 46 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் திலக் வர்மா 25, டிம் டேவிட் 11, கேப்டன் ஹர்டிக் பாண்டியா 11 ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் கொடுக்க தவறினர். அதனால் மும்பையை வென்ற குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா, ரமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், ஓமர்சாய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

- Advertisement -

சொதப்பல் கம்பேக்:
முன்னதாக இந்த போட்டியில் 169 ரன்களை துரத்திய மும்பைக்கு அதிரடியான துவக்கத்தை கொடுக்க வேண்டிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் இசான் கிசான் 4 பந்துகளை எதிர்கொண்டு ஓமர்ஸாய் வேகத்தில் டக் அவுட்டானார். கடந்த 2023 டிசம்பர் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக விளையாடத் தேர்வான அவர் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டதாக சொல்லி பாதியிலேயே வெளியேறினார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுமாராக விளையாடிய கேஎஸ் பரத்துக்கு பதிலாக விக்கெட் கீப்பராக உங்களை தேர்வு செய்வதற்கு ரஞ்சிக்கோப்பையில் விளையாடி தயாராக இருங்கள் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரை வெளிப்படையாக கேட்டுக் கொண்டார். ஆனால் அதை செய்யாத இஷான் கிசான் பரோடாவுக்கு சென்று பாண்டியா சகோதரர்களுடன் சேர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான்
பயிற்சிகளை மேற்கொண்டார்.

- Advertisement -

அதன் பின் இந்தியாவுக்காக விளையாட ரஞ்சிக்கோப்பையில் விளையாடுமாறு பயிற்சியாளர் கேட்டுக்கொண்டால் நீங்கள் அதை செய்ய வேண்டும் என்று இஷான் கிசானை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கேட்டுக்கொண்டார். ஆனால் அதையும் கேட்காத இஷான் கிசான் ரஞ்சிக் கோப்பையை முழுமையாக புறக்கணித்து மும்பையில் நடைபெற்ற டிஒய் பாட்டீல் உள்ளூர் டி20 தொடரில் களமிறங்கி ஐபிஎல் தொடருக்காக தயாரானார்.

இதையும் படிங்க: கட்டியணைக்க வந்த ஹார்டிக் பாண்டியா.. தட்டி உதறிவிட்ட ரோஹித் சர்மா – போட்டிக்கு பின் நடந்தது என்ன?

கடைசியில் பார்த்தால் ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியிலேயே அவர் டக் அவுட்டாகி சொதப்பலான கம்பேக் கொடுத்துள்ளார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் இதற்குத்தான் இந்தியாவுக்காக விளையாடாமல் ஐபிஎல் தொடருக்கு தயாரானீர்களா? என்று இஷான் கிசானை கலாய்கின்றனர். இதற்கிடையே ரஞ்சிக் கோப்பையை புறக்கணித்ததால் இந்திய கிரிக்கெட் அணியின் 2023 – 24 மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்து இஷான் கிசான் அதிரடியாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement