முதலில் உங்கள பாருங்க.. நீங்கல்லாம் பொறுப்பான கேப்டனா.. ஹர்மன்ப்ரீத்தை விளாசும் ரசிகர்கள்

HarmanPreet Kaur
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிரணி விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற இந்திய ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது.

நவி மும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 131 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. ஷபாலி வர்மா 1, ஜெமிமா ரோட்ரிகஸ் 13, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 6 என முக்கிய வீராங்கனைகள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 30, ரிச்சா கோஸ் 23, மந்தனா 23 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு அலிசா ஹீலி 26, தஹிளா மெக்ராத் 19, பெத் மூனி 20, எலிஸ் பெரி 34*, போபே லிட்ச்பீல்ட் 18* ரன்கள் அடித்து 19 ஓவரிலேயே எளிதான வெற்றி பெற்றுக் கொடுத்தனர். அந்த நிலையில் இப்போட்டியின் முடிவில் தோல்விக்கான காரணத்தை பற்றி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியது பின்வருமாறு.

“19வது ஓவர் வரை நாங்கள் போட்டியை எடுத்துச் சென்றது மிகப்பெரிய நேர்மறையான செயல்பாடாகும். ஒருவேளை 19வது ஓவரில் ஸ்ரேயாங்கா பாட்டில் இலக்கை சரியாக செயல்படுத்தியிருந்தால் வெற்றியில் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்பட்டிருக்கலாம்” என்று கூறினார். அதாவது 19வது ஓவரில் 12 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்ட போது இளம் வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டில் சரியாக பந்து வீசவில்லை என்று அவர் குறை கூறினார்.

- Advertisement -

ஆனால் இப்போட்டியில் முதலில் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கௌர் 12 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 6 ரன்களை எடுத்து இந்தியா 150 ரன்கள் கூட தொட முடியாமல் சென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய மோசமான செயல்பாட்டை பற்றி பேசாத அவர் இளம் வீராங்கனை மீது குறை சொல்லியதால் அதிருப்தியடையும் ரசிகர்கள் முதலில் உங்களை நீக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: இல்ல எனக்கு புரியல.. துணைக்கேப்டனா இருந்த அவரை எதுக்கு தூக்குனீங்க? – ஆகாஷ் சோப்ரா விளாசல்

மேலும் தோனி போல ஜெர்ஸி நம்பரை (7) கொண்டிருந்தால் மட்டும் போதாது அவர் போல தோல்வியை சந்திக்கும் போது இளம் வீராங்கனைகளை குறை சொல்லாமல் ஆதரவு கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள் என்றும் ஹர்மன்ப்ரீத் மீது ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். சமீப காலங்களாகவே பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் சுமாராக செயல்பட்டு வரும் அவர் கடந்த வருடம் வங்கதேச அணியினரை கீழ்த்தரமாக பேசி ஐசிசியிடம் தடை பெற்று இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement