எப்படி இருந்த மனுஷன்.. ரோஹித்தை அலைக்கழித்த பாண்டியா மீது மும்பை ரசிகர்கள் கோபம்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஆதங்கம்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மார்ச் 24ஆம் தேதியான நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 5வது லீக் போட்டியில் மும்பையை 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. அகமதாபாத் நகரில் நடந்த அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 168/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45, கேப்டன் கில் 31 ரன்கள் எடுத்தனர்.

மும்பை சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து 169 ரன்களை துரத்திய மும்பைக்கு ரோகித் சர்மா 43, நமன் திர் 20, தேவாலட் ப்ரேவிஸ் 46 ரன்கள் எடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் திலக் வர்மா 25, டிம் டேவிட் 11, கேப்டன் ஹர்திக் பாண்டியா 11 ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறியதால் 20 ஓவரில் 162/9 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை தோற்றது.

- Advertisement -

ரசிகர்கள் கோபம்:
அதனால் வெற்றி கண்ட குஜராத் சார்பில் அதிகபட்சமாக ஓமர்சாய், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், மோஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். முன்னதாக இப்போட்டியில் ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை அணிக்காக முதல் முறையாக கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். அதில் மும்பை பந்து வீசிய இன்னிங்ஸில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை வலுக்கட்டாயமாக அவர் பவுண்டரி எல்லைக்கு அருகே சென்று நிற்குமாறு வற்புறுத்தி அலைக்கழித்தது ரசிகர்களை கோபமடைய வைத்தது.

ஏனெனில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்த வரை பெரும்பாலும் உள்வட்டத்திற்கு உள்ளேயே நின்று ஃபீல்டிங்கை செட்டிங் செய்வார். ஆனால் தற்போது கேப்டன் பதவியில் இல்லாததால் அவரை லாங் ஆன் திசைக்கு சென்று ஓரமாக ஃபீல்டிங் செய்யுமாறு ஹர்திக் பாண்டியா மாற்றி மாற்றி சொன்னது மும்பை ரசிகர்களை கோபமடைய வைத்தது.

- Advertisement -

குறிப்பாக கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவுக்கு சீனியர் என்ற முறையில் நேற்று வந்த பாண்டியா விரும்பிய இடத்தில் ஃபீல்டிங் செய்ய விடக்கூடாதா என்று மீது ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். மறுபுறம் வழக்கம் போல உள்வட்டத்திற்குள் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மா புதிய கேப்டன் பாண்டியா தம்மை லாங் ஆன் திசைக்கு செல்லுமாறு சொன்ன போது “என்னையா சொல்றீங்க? நானா” என்ற வகையில் வெள்ளந்தியாக ரியாக்சன் கொடுத்து பவுண்டரி அருகே ஓடி சென்று நின்றது மும்பை ரசிகர்களின் நெஞ்சை மேலும் புண்ணாக்கியது.

இதையும் படிங்க: அடிக்க வேண்டிய இலக்கை அடிக்க முடியாம நாங்க தோக்க இதுவே காரணம் – ஹார்டிக் பாண்டியா பேட்டி

இதை பார்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள் எங்கள் கேப்டன் தல தோனிக்கு நிகராக 5 கோப்பைகளை வென்று கடந்த வருடம் வரை ராஜாங்கம் நடத்திய ரோகித் சர்மாவுக்கு இன்று இப்படி ஒரு நிலையா? என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இதனால் இந்த வருடத்துடன் மும்பை அணியிலிருந்து வெளியே வந்து விடுமாறும் ரசிகர்கள் ரோகித் சர்மாவுக்கு கோரிக்கை வைப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement