அடிக்க வேண்டிய இலக்கை அடிக்க முடியாம நாங்க தோக்க இதுவே காரணம் – ஹார்டிக் பாண்டியா பேட்டி

Pandya
- Advertisement -

அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணி :

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பாக சாய் சுதர்சன் 45 ரன்களையும், சுப்மன் கில் 31 ரன்களையும் குவித்து அசத்தினர். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே குவித்ததால் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்து தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இந்த இலக்கு எட்டக்கூடிய இலக்கு தான் ஆனாலும் ஒரு சில நாட்களில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவது சகஜம் தான். மற்ற போட்டிகளை பொறுத்து பார்க்கையில் : இந்த போட்டியில் கடைசி 5 ஓவர்களில் இந்த இலக்கை விரட்டி இருக்க முடியும்.

- Advertisement -

ஆனால் இந்த போட்டியின் போது இலக்கு அருகில் இருந்தும் மொமென்ட்டம் இல்லாமல் போய்விட்டது. அதனாலேயே நாங்கள் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தோம். மீண்டும் இந்த மைதானத்தில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் இந்த மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் விளையாடுவது நல்ல அனுபவமாக இருக்கும். ரஷித் கான் ஓவரில் திலக் வர்மா சிங்கிள் எடுக்காதது பிரச்சனை கிடையாது.

இதையும் படிங்க : எனக்கே ஆச்சர்யமா இருக்கு.. 2 பந்துலயே அதை கணிச்சுட்டேன்.. மும்பையை வீழ்த்திய ஆட்டநாயகன் சுதர்சன் பேட்டி

அந்த நேரத்தில் அவர் வேறு விடயத்தை யோசித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே நிச்சயம் நான் அவரை நம்புகிறேன். இது ஒரு பிரச்சனையே இல்லை இன்னும் 13 போட்டிகள் வர இருக்கின்றன அதில் நாங்கள் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement