ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல், ரிசப் பண்ட் ஆகியோரை தேர்வு செய்த தேர்வுக்குழு சஞ்சு சாம்சனை கழற்றி விட்டுள்ளது. இத்தனைக்கும் கடைசியாக விளையாடிய ஐந்து டி20 போட்டிகளில் 3 சதங்களை அதுவும் தென்னாப்பிரிக்காவில் 2 சதங்களை அடித்த அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
அது போக ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடிய போட்டியில் சதத்தை அடித்த அவர் 56 என்ற நல்ல பேட்டிங் சராசரியை கொண்டுள்ளார். அப்படி இருந்தும் அவரைத் தேர்ந்தெடுக்காத தேர்வுக்குழு ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதும் தொடர்ச்சியாக அசத்தாக ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுத்துள்ளது. அதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்கள் என்றே சொல்லலாம்.
பழைய கருத்து:
இந்நிலையில் சஞ்சு சாம்சன் பற்றி கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கம்பீர் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்கிறார்கள். அதில் கம்பீர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை சாம்சன் விளையாடவில்லையெனில் அது அவருடைய இழப்பல்ல. இந்திய அணியின் இழப்பு. எனவே விராட் கோலி, ரோஹித் சர்மா போல அவருக்கும் ஆதரவு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்”
“அவரை கழற்றி விடுவதால் நீங்கள் வருங்காலத்தில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வரப்போகும் ஒருவரை இழக்கப் போகிறீர்கள். துரதிஷ்டவசமாக இதுவரை அவருக்கு நாம் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை. தேர்வுக்குழு அறையில் உட்கார்ந்திருப்பவர்கள் சாம்சன் ஏன் டி20 உலகக் கோப்பை அணியில் இல்லை அல்லது கடந்த உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்று தங்களுடைய முடியை சொறிந்து கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.
நாற வாய் தானே:
அதைப் பார்க்கும் ரசிகர்கள் அன்று பேசியது நாற வாய் தானே? என்று கௌதம் கம்பீர் மீது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் இன்று கௌதம் கம்பீர் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். எனவே இந்திய அணியின் வீரர்கள் தேர்வில் ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக அவருடைய பங்கு தான் அதிகமாக இருக்கும்.
இதையும் படிங்க: சாக்கு போக்கு சொல்லி ரஞ்சி போட்டியில் விளையாட மறுத்த விராட் கோலி.. நடவடிக்கை பாயுமா? – விவரம் இதோ
அப்படிப்பட்ட நிலையில் சாம்சனை தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று கம்பீர் மீது ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். மேலும் அவரை தேர்ந்தெடுக்காதது கம்பீர தலைமையிலான இந்திய அணிக்கு தான் இழப்பு என்றும் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சாம்சன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



