உங்கள போய் அடுத்த சிஎஸ்கே கேப்டன்னு தப்பு கணக்கு போட்டமே, பென் ஸ்டோக்ஸ் மீது ரசிகர்கள் அதிருப்தி – காரணம் என்ன

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆசஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பர்மிங்கம் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. அப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து முதல் நாளிலேயே 393/8 ரன்களை குவித்து ஜோ ரூட் 118* ரன்கள் களத்தில் இருந்தும் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்த தைரியமாக டிக்ளேர் செய்கிறோம் என்ற பெயரில் வெற்றியை தீர்மானித்த எக்ஸ்ட்ரா 40 – 50 ரன்களை எடுக்க தவறியது தோல்விக்கு முக்கிய காரணமானது.

முன்னதாக ப்ரெண்டன் மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடி பாதையில் விளையாடி சொந்த மண்ணில் நியூசிலாந்து, இந்தியா போன்ற அணிகளை அடித்து நொறுக்கி தொடர் வெற்றிகளை கண்ட அந்த அணியால் வெளிநாட்டில் சாதிக்க முடியுமா என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதை கடந்த டிசம்பரில் தார் ரோட் பிட்ச்களில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி உடைத்த இங்கிலாந்து இதே அணுகு முறையில் விளையாடலாம் என்ற போலியான தன்னம்பிக்கையை பெற்றது.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
அதனாலேயே இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் வெறும் 7 ரன்களை முன்னிலை பெற்றும் நிதானத்துடன் விளையாடாமல் அதிரடியாகவே விளையாடிய இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது. அதை விட ஆஸ்திரேலியாவை அட்டாக் செய்வதற்காக தரமான ஸ்பின்னர்கள் இல்லாத காரணத்தால் 2019லேயே ஓய்வு பெற்ற மொயின் அலியை பேசி சம்மதிக்க வைத்து இந்த தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து சேர்த்தது. அந்த நிலையில் பேட்டிங்கில் 37 ரன்களையும் பந்து வீச்சில் 3 விக்கெட்களையும் எடுத்த அவர் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டார். இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2வது போட்டிக்கான பிளேயிங் லெவனை ஒருநாள் முன்பாகவே அறிவித்துள்ள இங்கிலாந்து மொயின் அலியை அதிரடியாக கழற்றி விட்டுள்ளது.

குறிப்பாக லார்ட்ஸ் பிட்ச் பச்சை புற்களுடன் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஸ்பின்னரே வேண்டாம் என முடிவெடுத்துள்ள பென் ஸ்டோக்ஸ் முழுவதுமாக 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க ஜோஸ் டாங் சேர்க்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதனால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் இதற்குத் தான் 3 வருடங்கள் கழித்து மொய்ன் அலியை வற்புறுத்தி கம்பேக் கொடுக்க வைத்தீர்கள்? என்று அவரது தலைமையிலான இங்கிலாந்தை விளாசுகின்றனர்.

- Advertisement -

அத்துடன் அவர்களுடைய பேச்சைக் கேட்டு கம்பேக் கொடுத்த மொய்ன் அலி அந்த போட்டியில் விரலில் சந்தித்த காயத்திற்கு வலி நிவாரணையை நடுவரிடம் கேட்காமல் பயன்படுத்தியதற்காக பிறந்தநாளில் 25% சம்பளம் அபராதமும் 2 கருப்பு புள்ளிகளையும் தண்டனையாக பெற்றார் என்பது மற்றுமொரு பரிதாபமாகும். அதனால் ஐபிஎல் தொடரில் ஒரு தோல்வியை சந்தித்தால் உடனடியாக மாற்றங்களை நிகழ்த்தும் பெங்களூருவை போல அவசரப்பட்டு மொய்ன் அலியை கழற்றி விட்டு இங்கிலாந்து அவமானப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அத்துடன் ஐபிஎல் 2023 தொடரில் 16.25 கோடிக்கு வாங்கப்பட்டு இதே ஆஷஸ் விளையாட வேண்டும் என்பதற்காக 2 போட்டியில் மட்டும் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் பெரும்பாலும் பெஞ்சில் இருந்து சென்னை சார்பில் இலவச சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு நாடு திரும்பியதை மறக்க முடியாது. மேலும் இந்த ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட போது இங்கிலாந்தின் கேப்டனாக செயல்பட்ட அனுபவமும் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராகவும் இருப்பதால் 41 வயதை கடந்த தோனிக்கு பின் சென்னை வழிநடத்த தகுதியானவர் பென் ஸ்டோக்ஸ் என்று அந்த அணி ரசிகர்கள் மனக்கணக்கு போட்டனர் என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஆனால் சமீபத்தில் அஸ்வின் தெரிவித்தது போல் எப்போதுமே ஒரு தொடரில் ஒரே 11 பேர் அணியை வைத்து 2011 உலகக்கோப்பை போன்ற நிறைய வெற்றிகளை பெற்ற தோனி இந்த ஐபிஎல் தொடரிலும் அனைவரும் விமர்சித்த துஷார் தேஷ்பாண்டேவை வைத்தே 5வது கோப்பையை வென்று காட்டினார்.

இதையும் படிங்க:தோனி செல்பிஷா? 2011 ஃபைனலில் யுவிக்கு முன் களமிறங்கிய – பின்னணியை பகிர்ந்த முத்தையா முரளிதரன்

அப்படிப்பட்ட அவர் இங்கிலாந்தின் கேப்டனாக இருந்தால் நிச்சயமாக 3 வருடங்கள் கழித்து ஓய்விலிருந்து வந்த மொய்ன் அலியை இப்படி கழற்றி விடமாட்டார் என்று உறுதியாக சொல்லலாம். ஆனால் அதை பென் ஸ்டோக்ஸ் செய்துள்ளதால் உங்களை போய் சென்னையின் அடுத்த கேப்டனாக நினைத்தோமே என்று சென்னை ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement