IPL 2023 : அப்ரிடிய விட கம்மியா இருக்கு – சீக்கிரம் முன்னேறுங்க, அர்ஜுன் டெண்டுல்கர் பவுலிங் – பற்றி ரசிகர்கள் அதிருப்தி கருத்து

Arjun Tendulkar
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 25வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 192/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 64* (40) இஷான் கிசான் 38 (31) என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுக்க ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக மார்க்கோ ஜான்சன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 193 ரன்களை துரத்திய ஹைதராபாத் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முடியாமல் மும்பையின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மயங் அகர்வால் 48 (41) ரன்களும் ஹென்றிச் க்ளாஸென் 36 (16) ரன்களும் எடுத்தனர். முன்னதாக இப்போட்டியில் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்களின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தன்னுடைய முதல் ஐபிஎல் விக்கெட்டை பதிவு செய்து அசத்தினார்.

- Advertisement -

கம்மியா இருக்கு:
சிறு வயது முதலே வேகப்பந்து வீச்சாளராக நாட்டுக்கு விளையாட வேண்டும் என்ற தன்னுடைய தந்தையின் ஆசையை நிறைவேற்ற பயிற்சிகளை எடுத்து வந்து அவர் நெட் பவுலராக இருந்து கடந்த வருடம் நேரடியாக மும்பை அணியில் வாங்கப்பட்டார். இருப்பினும் ஜாம்பவானின் மகன் விரைவாக வாய்ப்பு பெற்று விட்டார் என்ற விமர்சனங்கள் வரும் என்பதற்காக அலைக்கழிக்கப்பட்ட அவர் ரஞ்சிக்கோப்பையில் கோவா அணிக்காக விளையாடி முதல் முறையாக சதமடித்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

அதனால் தற்போது முன்பை விட அனுபவம் கொண்டுள்ள அவர் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான நிலையில் இப்போட்டியில் 2.5 ஓவரில் 18 ரன்களை 6.35 என்ற எக்கனாமியில் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்து சிறப்பாகவே செயல்பட்டார். குறிப்பாக கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது புவனேஸ்வர் குமாரை அவுட் செய்து முதல் விக்கெட்டை பதிவு செய்து உணர்ச்சியுடன் கொண்டாடிய அவரை கேப்டன் ரோஹித் சர்மா மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.

- Advertisement -

அதே போல ஐபிஎல் தொடரில் தாம் ஒரு விக்கெட் கூட எடுக்காத நிலையில் தன்னுடைய மகன் முதல் விக்கெட்டை எடுத்ததை நினைத்து சச்சினும் பெவிலியினில் பெருமையடைந்தார். இருப்பினும் நீண்ட ஓட்டத்தைக் கொண்டிருந்தாலும் கால்களுக்கு இடையேயான ஓட்டமும் பந்தை ரிலீஸ் செய்யும் அவருடைய ஆக்சனும் வித்தியாசமாக வேடிக்கையாக இருக்கிறது. அதனாலையோ என்னவோ தெரியவில்லை எவ்வளவு முயற்சித்தாலும் அவரால் இதுவரை ஒரு முறை கூட 140 கிலோ மீட்டர் வேகத்தை தொட முடியவில்லை.

அதை விட பொதுவாகவே எப்பேர்பட்ட சுமாரான பவுலர்களும் போட்டி துவங்கும் போது முழுமையான எனர்ஜியுடன் களமிறங்குவார்கள் என்பதால் லேசான பவர் கொடுத்து வீசினாலே புதிய பந்து அதிரடியான வேகத்தில் செல்லும். ஆனால் நேற்றைய போட்டியில் ஹைதராபாத்துக்கு எதிரான முதல் ஓவரை வீசிய அவர் 125 – 130+ கி.மீ வேகத்தில் துவங்கி 6வது பந்தை சோர்ந்து போய் வெறும் 107.2 கி.மீ வேகத்தில் முடித்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்தது.

- Advertisement -

வெறும் 23 வயது மட்டுமே நிறைந்த துடிதுடிப்பான இளம் வீரரான அவர் முதல் ஓவரிலேயே புதிய பந்தில் இவ்வளவு மெதுவாக வீசியது நிச்சயமாகவே எதிர்பாராத ஒன்றாகவே அமைந்தது. குறிப்பாக பாகிஸ்தானின் முன்னாள் ஸ்பின்னர் ஷாஹித் அப்ரிடி அசால்ட்டாக 134 கி.மீ வீசுவார் என்ற நிலையில் ஒரு வேகப்பந்து வீச்சாளரான இவர் இவ்வளவு மெதுவாக வீசுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

மேலும் நேற்று கடைசி ஓவரில் 20 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் அவுட்டான புவனேஸ்வர் குமாரின் இடத்தில் ரிங்கு சிங் போன்ற தரமான இளம் பேட்ஸ்மேன்கள் இருந்திருந்தால் கூட இந்த வேகத்தில் வீசிய அவரது பந்துகளை நிச்சயமாக சரமாரியாக அடித்திருப்பார்கள்.

இதையும் படிங்க:IPL 2023 : இப்டியே பண்ணிங்கன்னா தோனிய தடை செஞ்சுடுவாங்க – வென்றும் சிஎஸ்கே பவுலர்களை எச்சரிக்கும் சேவாக்

இருப்பினும் ஆரம்பகட்ட நிலையில் மட்டுமே உள்ளே அர்ஜுன் டெண்டுல்கர் நல்ல வேகமான ஆக்சன், லைன், லென்த் ஆகியவற்றை கொண்டுள்ளதால் மிக விரைவில் 10 – 20 கி.மீ வேகத்தை சேர்த்தால் மட்டுமே ஐபிஎல் தொடரில் நீடித்து தந்தையின் பெயரை காப்பாற்ற முடியும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement