ரோஹித் சர்மா ஒசத்தி அவர் தூசியா? தரமான வீரரை கழற்றி விட்ட தேர்வுக்குழுவை விளாசும் ரசிகர்கள்

Bhuvneswar Kumar
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதும் விராட் கோலி மீண்டும் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய அவர்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக மேற்கொண்டு ஒரு டி20 போட்டியில் கூட விளையாடாமல் இருந்தனர்.

மேலும் 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திக்கும் முக்கிய காரணமாக இருந்த சீனியர்களை கழற்றி விட்டு இம்முறை ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை பிசிசிஐ களமிறக்கும் என்று செய்திகள் வெளியானது. அந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவருமே காயத்தை சந்தித்துள்ளதால் இத்தொடரில் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
இதன் காரணமாக 2024 டி20 உலகக் கோப்பையில் அந்த இருவருமே விளையாடுவதும் ஏறத்தாழ உறுதியாகியுள்ளது என்றே சொல்லலாம். ஆனால் இதில் ரோஹித் சர்மாவை தேர்வுக் செய்துள்ள தேர்வுக் குழுவினர் மற்றொரு நட்சத்திர சீனியர் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரை தேர்ந்தெடுக்காதது நிறைய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோஹித் சர்மா சுமாராக செயல்பட்டு தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதன் பின் கடந்த ஒன்றரை வருடங்களாக மேற்கொண்டு எந்த டி20 போட்டியிலும் விளையாடாத அவர் 2023 ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாட விளையாடி அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையும் படைத்தார்.

- Advertisement -

அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் இப்போதும் சுமாராகவே செயல்பட்டு வரும் ரோகித் சர்மா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மறுபுறம் அதே 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் கழற்றி விடப்பட்ட புவனேஸ்வர் குமார் 2023 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை எடுத்து ஓரளவு நன்றாகவே செயல்பட்டார். அத்துடன் உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற 2023 யூபி டி20 தொடரிலும் அவர் சராசரிக்கும் மேலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார்.

இதையும் படிங்க: கேமரா இல்லாததால்.. அப்போல்லாம் அந்த நாட்டு நிறைய பேர் பவுலர்ஸ் பந்தை சேதப்படுத்திருக்காங்க.. பிரவீன் குமார்

அந்த வகையில் ரோகித்தை விட டி20 கிரிக்கெட்டில் நல்ல ஃபார்மில் இருக்கும் புவனேஸ்வர் குமாரை ஏன் தேர்வு செய்யவில்லை என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும் ரோகித் சர்மா பேட்ஸ்மேன் என்பதால் தேர்வு செய்துள்ள தேர்வுக் குழு புவனேஸ்வர் குமார் பவுலர் என்பதால் பாகுபாடு பார்த்து கழற்றி விட்டுள்ளதாக சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement