15 வருடங்கள் காத்திருந்து காத்திருந்து – இந்த வருடமும் ஈ சாலா கப் கிடைக்காததால் ஆர்சிபியை வெச்சு செய்யும் ரசிகர்கள்

RCB vs PBKS Extras
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று முடிந்து பிளே ஆப் சுற்றுப் போட்டிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அதில் மே 27இல் பைனலில் விளையாட போகும் 2-வது அணியை தீர்மானிக்கும் முக்கியமான குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் கடந்த 2008 க்குப் பின் 13 வருடங்கள் கழித்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் வெறும் 157/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Rajat Patidar 58

அந்த அணிக்கு விராட் கோலி 7 (8) கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 25 (27) கிளன் மேக்ஸ்வெல் 24 (13) தினேஷ் கார்த்திக் 6 (7) என முக்கிய நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் எலிமினேட்டர் போட்டியில் சதமடித்து காப்பாற்றிய இளம் வீரர்ரஜத் படிதார் மீண்டும் சிறப்பாக பேட்டிங் செய்து அதிகபட்சமாக 58 (42) ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் துல்லியமாக செயல்பட்ட பிரஸித் கிருஷ்ணா மற்றும் ஓபேத் மெக்காய் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

பெங்களூரு ஏமாற்றம்:
அதை தொடர்ந்து 158 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் ஆகிய ஓபனிங் ஜோடி ஆரம்பத்திலேயே சரவெடியாக பதிவு செய்து 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தது. அதில் ஜெய்ஸ்வால் 21 (13) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 (21) தேவ்தூத் படிக்கள் 9 (12) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் பெங்களூர் பவுலர்களை புரட்டி எடுத்த ஜோஸ் பட்லர் 10 பவுண்டரி 6 சிக்சருடன் 106* (60) ரன்கள் குவித்து இந்த வருடத்தின் 4-வது சதத்தை விளாசி பினிஷிங் செய்தார்.

Jost Buttler 109

அதனால் 18.1 ஓவரில் 161/3 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மே 29இல் நடைபெறும் குஜராத்துக்கு எதிரான மாபெரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மறுபுறம் இந்த முக்கியமான போட்டியில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மொத்தமாக சொதப்பிய பெங்களூரு ஐபிஎல் தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

15 வருடங்களாக:
கடந்த 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி போன்ற ஜாம்பவான்கள் பெங்களூருவை வழிநடத்திய போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. குறிப்பாக 2013 – 2021 வரை விராட் கோலியின் தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டிவிலியர்ஸ் போன்ற நிறைய நட்சத்திர வீரர்கள் விளையாடிய போதிலும் அந்த அணியால் கோப்பையை தொடக்கூட முடியவில்லை. இத்தனைக்கும் லீக் தொடரில் சிறப்பாக செயல்படக்கூடிய அணியாக வலம் வரும் பெங்களூரு நாக்-அவுட் போன்ற ஏதேனும் முக்கிய தருணங்களில் சொதப்பி வெளியேறுவது வாடிக்கையாகி வருகிறது.

அதனால் ஒவ்வொரு வருடமும் விமர்சனங்களுக்கும் கேலி கிண்டல்களுக்கும் அந்த அணி உள்ளாகி வருவதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக கேப்டனாக விராட் கோலி இருக்கும் வரை பெங்களூரு கோப்பையை வெல்ல முடியாது என்பது போன்ற நிறைய விமர்சனங்களை சந்தித்ததால் கடந்த வருடத்துடன் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனால் இந்த வருடம் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்திய அனுபவம் கொண்ட டுப்லஸ்ஸிஸ் தலைமையில் தினேஷ் கார்த்திக் போன்ற நல்ல வீரர்களுடன் புதிய ஜெர்ஸியில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய பெங்களூரு லீக் சுற்றில் தட்டுத் தடுமாறி டெல்லியை மும்பை தோற்கடித்ததால் கிடைத்த உதவியுடன் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

வெச்சு செய்யும் ரசிகர்கள்:
அந்த நிலைமையில் எலிமினேட்டர் போட்டியில் இளம் வீரர் ரஜத் படிடார் காப்பாற்றியதால் தப்பிய அந்த அணி 2020, 2021 வருடங்களைப் போல் அல்லாமல் இந்த முறை வென்று குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் இம்முறையும் முக்கியமான போட்டியில் பேட்டிங் பவுலிங்கில் சொதப்பிய அந்த அணி மீண்டும் வெற்றியை கோட்டை விட்டு வரலாற்றில் 15-வது முறையாக பரிதாபமாக வீட்டுக்கு கிளம்பியுள்ளது. இதன் காரணமாக 15 வருடங்களாக கோப்பையை வெல்வோம் என காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி என்று பெங்களூர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சோகத்துடன் காணப்படுகிறார்கள்.

மறுபுறம் இம்முறையும் ஈ சாலா கோப்பையை தவறவிட்ட பெங்களூர் அணியை எதிரணி ரசிகர்கள் வகை வகையாகக் கலாய்த்து வருகின்றனர். ஏனெனில் சாதாரண போட்டியில் வென்றால் கூட அந்த அணி ரசிகர்கள் “என்னமோ பைனலில் வென்று கோப்பையை முத்தமிட்டது போல” வம்பிழுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தற்போது மீண்டும் தோற்றுப் போனதால் “கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீங்க” என்று எதிரணி ரசிகர்கள் பெங்களூரு மற்றும் அதன் ரசிகர்களை வெச்சு செய்து வருகிறார்கள்.

Advertisement