நீங்க பவுலர் என்பதை மறந்துட்டீங்க ! அரைசதம் அடிக்கும் நட்சத்திர ஆஸி பவுலரை கலாய்க்கும் ரசிகர்கள்

Pat Cummins Daniel Sams MI vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் மும்பை நகரில் பல எதிர்பாராத திருப்பங்களுடன் வெற்றிகரமான 3-வது வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற 30 போட்டிகளில் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை பல அதிரடி திருப்பங்களுடன் ரசிகர்களுக்கு பல பரபரப்பான திரில்லர் தருணங்களை ஏற்படுத்தியது. அந்த வகையில் வரும் மே 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் கடும் போட்டியிட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த தொடரில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின. ப்ராபோர்ன் மைதானத்தில் கடைசி வரை அனல் பறந்த அந்த போட்டியில் வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்த ராஜஸ்தான் திரில் வெற்றியை சுவைத்தது.

- Advertisement -

பட்லர், சஹால் கலக்கல்:
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 217/5 ரன்கள் குவித்து இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நட்சத்திர தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக 61 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட சதமடித்து 103 ரன்கள் விளாசினார். இது இந்த தொடரில் அவர் அடிக்கும்
2-வது சதமாகும். கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சுனில் நரேன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 218 என்ற இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர் ஆரோன் பின்ச் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இணைந்து 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளமிட்டனர். இதில் ஆரோன் பின்ச் அதிரடியாக 58 (28) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மறுபுறம் ஸ்ரேயாஸ் அய்யர் 51 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உட்பட 85 ரன்கள் விளாசி தனது அணியின் வெற்றிக்காக போராடினார்.

- Advertisement -

ஆனால் அந்த நேரம் பார்த்து 17-வது ஓவரில் அபாரமாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 4-வது பந்தில் ஷ்ரேயஸ் ஐயரை அவுட் செய்து அதற்கு அடுத்த 2 பந்துகளில் சிவம் மாவி, பட் கமின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அவுட் செய்து ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து 21-வது பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார். இதனால் 19.4 ஓவர்களில் 210 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்த கொல்கத்தா போராடி தோல்வி அடைந்து இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்து 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

வள்ளல் பரம்பரை கமின்ஸ்:
முன்னதாக நேற்றைய போட்டியின் சுனில் நரேனை தவிர இதர அனைத்து கொல்கத்தா பந்துவீச்சாளர்களும் மோசமாக பந்துவீசி ரன்களை வாரி இறைத்தனர். அதிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் ஒருபடி மேலே சென்று 4 ஓவர்களில் 1 விக்கெட் எடுத்தாலும் 50 ரன்களை 12.50 என்ற மோசமான எகனாமியில் வாரி வழங்கி அரைசதம் அடித்தார். இது மட்டுமல்லாமல் இந்த வருடம் இதுவரை 4 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் முறையே 2-49, 0-51, 1-40, 1-50 என வெறும் 4 விக்கெட்டுகளை எடுத்து 12.28 என்ற படுமோசமான எகனாமியில் வீசி வருவது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக ரன்களை வாரி வழங்கும் பவுலர்களின் பட்டியலில் அவர் முதலிடம் பிடிக்கிறார். அந்த பட்டியல் இதோ:
1. பட் கமின்ஸ் : 12.28 எகனாமி
2. கிறிஸ் ஜோர்டான் : 11.91 எகனாமி
3. பிரசிட் கிருஷ்ணா : 11.40 எகனாமி

கலாய்க்கும் ரசிகர்கள்:
அதிலும் ஒரு பந்து வீச்சாளரான அவர் 4 போட்டிகளில் 2 முறை அரைசதம் கடந்து எஞ்சிய 2 போட்டிகளிலும் கிட்டத்தட்ட அரை அடிக்கும் அளவுக்கு மோசமாக பந்து வீசி வருகிறார். இதன் காரணமாக “நீங்கள் ஒரு பேட்ஸ்மேன் என நினைத்துக்கொண்டு பவுலர் என்பதை மறந்துவிட்டீங்க” என்று ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

ஏனெனில் கடந்த வாரம் மும்பைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 16-வது ஓவரில் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட போது மற்றொரு ஆஸ்திரேலிய பவுலர் டேனியல்ஸ் வீசிய ஒரே ஓவரில் 6, 6, 4, 6, 2 (நோ பால்), 4, 6 என அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து 35 ரன்களையும் விளாசி மும்பைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அவர் கொல்கத்தாவை தனி ஒருவனாக வெற்றிபெற வைத்தார். அதிலும் 14 பந்துகளில் சதம் அடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற கேஎல் ராகுல் சாதனையையும் சமன் செய்தார். எனவே அதையே இன்னும் நினைத்துக்கொண்டு பந்து வீசாமல் ஒரு பவுலராக சிறப்பாக பந்து வீச முயற்சியுங்கள் என ரசிகர்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement