அவங்களுக்கு எண்ணமில்ல்லை, நெதர்லாந்திடம் போட்ட தடவலால் வென்றும் பாகிஸ்தானை திட்டும் பாக் ரசிகர்கள் – எதற்கு தெரியுமா

Pak vs NED Mohammed Rizwan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அக்டோபர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற 29வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான இந்தியாவிடம் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் அவமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் 2வது போட்டியில் கத்துக்குட்டி ஜிம்பாப்வேவிடம் அதைவிட மோசமாக செயல்பட்டு வெறும் 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அதனால் கடுமையான விமர்சனத்திற்கும் கிண்டல்களுக்கும் உள்ளான அந்த அணி அரையிறுதிக்கு செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இப்போட்டியில் களமிறங்கியது.

பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் பாகிஸ்தானின் அதிரடியான வேகப்பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 91/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்டீபன் மைபர்க் 6, மேக்ஸ் ஓ’தாவுத் 8, கேப்டன் எட்வர்ட்ஸ் 15 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக அக்கர்மேன் 27 (27) ரன்களை எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சடாப் கான் 3 விக்கெட்டுகளையும் முகமது வாசிம் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

மெகா தடவல்:
அதை தொடர்ந்து 92 என்ற சுலபமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் பாபர் அசாம் மீண்டும் 4 (5) ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அப்போது களமிறங்கிய பக்கார் ஜமான் அதிரடியாக விளையாட முயற்சித்து 3 பவுண்டரியுடன் 20 (16) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் வெற்றியை உறுதி செய்து 5 பவுண்டரியுடன் 49 (39) ரன்களில் அவுட்டானார்.

அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் நின்ற ஷான் மசூட் 12 (16) ரன்களில் அவுட்டானாலும் இப்திகார் அகமது 6* (5) ரன்களும் சடாப் கான் 4* (2) ரன்களும் எடுத்து 13.5 ஓவரில் 95/4 ரன்களை எடுக்க வைத்து வெற்றி பெற வைத்தனர். நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக க்ளோவர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 6 விக்கெட் வித்யாசத்தில் இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் குரூப் 2 புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளை பெற்று 5வது இடத்தில் நீடிக்கிறது. இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய சடாப் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

இருப்பினும் இப்போட்டியில் வெறும் 92 ரன்களை எடுப்பதற்கு 13.5 ஓவர்களை எடுத்துக்கொண்டது வென்றும் பாகிஸ்தானுக்கு முழுமையான பயனை அளிக்கவில்லை. ஏனெனில் முதலிரண்டு போட்டிகளில் படுமோசமான தோல்விகளை பதிவு செய்ததால் ரன்ரேட்டை உயர்த்துவதற்கு எஞ்சிய போட்டிகளில் பெரிய வெற்றிகளை பதிவு செய்ய வேண்டிய அவசியம் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் அபாரமாக பந்து வீசிய அந்த அணி 92 ரன்களை 10 ஓவர்களுக்குள் சேசிங் செய்திருந்தால் இன்னும் கூடுதலான ரன்ரேட்டை பெற்றிருக்க முடியும்.

ஆனால் கத்துக்குட்டியான நெதர்லாந்தின் சுமாரான பந்து வீச்சில் கூட அந்த அணியின் எந்த பேட்ஸ்மேனும் 130 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடாமல் சேசிங் செய்ய 14 ஓவர்கள் எடுத்துக்கொண்டனர். குறிப்பாக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்றழைக்கப்படும் முகமது ரிஸ்வான் நன்கு செட்டிலாகியும் கடைசி வரை அதிரடியை துவக்காமல் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது போலவே எஞ்சிய வீரர்களும் தடவினர். இதனால் எதிர்மறையில் இருந்த அந்த அணியின் ரன்ரேட் (+0.765) நேர்மறைக்கு வந்ததே தவிர 1 புள்ளியை கூட தாண்டவில்லை. இதனால் அடுத்தடுத்த தோல்விகளுக்கு பின்பும் செமி பைனலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் பாகிஸ்தான் வேகமாக விளையாடவில்லை என்று அந்நாட்டு ரசிகர்களே கலாய்க்கிறார்கள்.

ஏனெனில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இதே நிலைமையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் தனது முதலிரண்டு போட்டிகளில் தோற்ற இந்தியா அதற்கடுத்த போட்டிகளில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக ரன் ரேட்டை உயர்த்துவதற்காகவே அதிரடி சரவெடியாக விளையாடியது. அப்படி மனம் தளராமல் போராடியும் அரையிறுதியை தொட முடியவில்லை என்பது வேறு கதை. ஆனால் அப்படி முழு மனதுடன் விளையாடாமல் தடவும் பாகிஸ்தான் இனியும் இந்த உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு செல்வது அவர்கள் நினைத்தாலும் முடியாது. ஏனெனில் அவர்கள் அதை மனதார நினைக்கவில்லை என்று ரசிகர்கள் சாடுகிறார்கள்.

Advertisement