IPL 2023 : நாங்க கழற்றி விட்டப்போவே சுதாரிக்க வேணாமா மும்பை, வெற்றியை தாரை வார்த்த வீரருக்கு – சிஎஸ்கே ரசிகர்கள் நன்றி

Mumbai Indians Rohit Sharma MI
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 17ஆம் தேதி நடைபெற்ற 63வது லீக் போட்டியில் வெற்றிகரமான மும்பையை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை 90% உறுதி செய்து கொண்டது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 177/3 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டோனிஸ் 89* (47) ரன்களும் கேப்டன் க்ருனால் பாண்டியா 49 (42) ரன்களும் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜேசன் பேரன்ஃடாப் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா 37 (25) ரன்களும் இஷான் கிசான் 59 (39) ரன்களும் எடுத்து 90 ரன்கள் விளாசி அற்புதமான தொடக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் கடப்பாரை பேட்டிங் என்றழைக்கப்படும் மும்பை எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூரியகுமார் யாதவ் 7, நேஹல் வதேரா 16, விஷ்ணு வினோத் 4 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய லக்னோ வெற்றிக்கு போராடியது. இருப்பினும் கடைசி நேரத்தில் டிம் டேவிட் அதிரடியாக 32* (19) ரன்கள் எடுத்ததால் வெற்றியை நெருங்கிய மும்பைக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

- Advertisement -

சுதாரிக்க வேணாமா:
அப்போது டிம் டேவிட், கேமரூன் கிரீன் என 2 அதிரடி பேட்ஸ்மேன்களை வைத்துக்கொண்டே அபாரமாக பந்து வீசிய இளம் வீரர் மோசின் கான் வெறும் 5 ரன்கள் மட்டும் கொடுத்ததால் திரில் வெற்றி பெற்ற லக்னோ சார்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் மற்றும் யாஷ் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். அந்த வகையில் இந்த போட்டியில் நல்ல துவக்கத்தைப் பெற்ற மும்பை ஃபினிஷிங் செய்ய தவறியது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. அதை விட பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த லக்னோ மைதானத்திலும் சிறப்பாக பேட்டிங் செய்த ஸ்டோனிஸ்க்கு எதிராக இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டான் 18வது ஓவரில் மோசமாக பந்து வீசி 6, 0, 4, 4, 6, 4 என 24 ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

முன்னதாக காயமடைந்த ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக பாதியில் வாங்கப்பட்ட அவர் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 12 ஓவர்களை வீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்து சதமடித்து 132 ரன்களை 11.00 என்ற மோசமான எக்கனாமியில் வாரி வழங்கி வள்ளலாக செயல்பட்டு வருகிறார். இந்த வருடம் டெத் ஓவர்களில் மும்பை ரன்களை வாரி வழங்கி வரும் நிலையில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் ஏற்கனவே இருக்கும் பவுலர்களை விட மோசமாக செயல்படுவது அந்த அணி ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

கடந்த 2020, 2021 சீசனில் பஞ்சாப் அணிக்காக 3 கோடிக்கு வாங்கப்பட்டு முறையே 9, 4 போட்டிகளில் 304, 96 ரன்களை வாரி வழங்கிய அவரை கடந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் இதே போல காயமடைந்த ஒரு வீரருக்கு பதிலாக 1 கோடிக்கு வாங்கியது. ஆனால் அதில் 4 போட்டிகளில் வெறும் 2 விக்கெட்களை எடுத்து சதமடித்து 135 ரன்கள் கொடுத்த அவர் அந்த 4 போட்டிகளிலும் சென்னையின் வெற்றி பறிபோவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் உடனடியாக சென்னை நிர்வாகம் கழற்றி விட்ட அவரை இந்த சீசனில் மும்பை வாங்கிய போதே இவர் சொதப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்படி எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்த போட்டியில் வெற்றி தாரை வார்ப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்த அவரை வாங்கிய மும்பையை நாங்கள் கழற்றிவிட்ட போதே சுதாரிக்க வேணாமா என்று சென்னை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: IPL 2023 : எங்க அப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்காரு, அவருக்கு வெற்றியை டெடிகேட் பண்றேன் – மும்பையை வீழ்த்திய ஹீரோ பேட்டி

ஆனாலும் நேற்றைய போட்டியில் மும்பை தோற்றதால் சென்னை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதனால் எதிரணியில் இருந்து கொண்டு எங்களின் வெற்றிக்கு உதவி செய்யும் நீங்கள் வேற லெவல் என்று கிறிஸ் ஜோர்டானுக்கு சென்னை ரசிகர்கள் நன்றியும் தெரிவிக்கின்றனர்.

Advertisement