IPL 2023 : அவ்ளோ தான் இனிமேல் வண்டி அதிரடியா ஓடாது, முக்கிய நேரத்தில் சொதப்பும் சிஎஸ்கே நட்சத்திர வீரர் – ரசிகர்கள் ஏமாற்றம்

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அதில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 7 வெற்றிகளை பதிவு செய்து 15 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக மே 10ஆம் தேதியான நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற 55வது லீக் போட்டியில் டெல்லியை 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் போராடி 167/8 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக சிவம் துபே 25 (12) ருதுராஜ் 24 (18) ராயுடு 23 (17) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சவாலான பிட்ச்சில் தேவையான ரன்களை எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 3 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் துரத்திய டெல்லி முதல் ஓவரிலிருந்தே தரமாக செயல்பட்ட சென்னை பவுலர்களுக்கு பதில் சொல்ல சொல்ல முடியாமல் தடுமாறி 20 ஓவர்களில் 140/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக ரிலீ ரோசவ் 35 (27) ரன்களை எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக மதிய சாப்பாடு 3 விக்கெட்டுகளையும் தீபக் சஹர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

வண்டி ஓடாது:
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு தொடக்க வீரர்கள் அவுட்டானதும் களமிறங்கிய அஜிங்க்ய ரகானே 2வது பந்திலேயே பவுண்டரியுடன் பேட்டிங்கை துவக்கியதால் வழக்கம் போல அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறிய அவர் 2 பவுண்டரியுடன் 21 (20) ரன்களை 10 எடுத்திருந்த போது 12வது ஓவரின் முதல் பந்திலேயே லலித் யதாவின் சிறப்பான கேட்ச்சால் அவுட்டாகி ஏமாற்றுத்துடன் சென்றார்.

இந்தியாவுக்காக 2011இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 3 வகையான கிரிக்கெட்டிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2015 உலகக் கோப்பையில் முக்கிய வீரராக விளையாடிய அவர் நாளடைவில் மெதுவாக விளையாடியதால் வெள்ளைப்பந்து அணியிலும் ஐபிஎல் தொடரிலும் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் டெஸ்ட் அணியில் தொடர்ந்து துணைக் கேப்டனாக அசத்தி வந்த அவர் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் சதமடித்து இந்தியாவை சிறப்பாக வழி நடத்தி ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் அதன் பின் சதமடிக்காமல் தடுமாறிய அவரை கடந்த பிப்ரவரியில் கழற்றி விட்ட தேர்வுக்குழு இளம் வீரர்களை நோக்கி நகர்வதாக அறிவித்தது. அதனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் மனம் தளராமல் போராடிய ரகானே சமீபத்திய ரஞ்சிக்கோப்பையில் இரட்டை சதமடித்து இந்த சீசனில் வெறும் 50 லட்சத்துக்கு சென்னை அணியில் வாங்கப்பட்டார். அந்த நிலையில் தமது சொந்த ஊரான மும்பைக்கு எதிரான முதல் போட்டியிலேயே 61 (27) ரன்களை விளாசி அதிவேக அரை சதமடித்த சென்னை வீரராக சாதனை படைத்த அவர் அதன் பின் 31 (19) 37 (20) என அதிரடியாக செயல்பட்டு கொல்கத்தாவுக்கு எதிராக உச்சகட்டமாக 71 (29) ரன்களை விளாசினார்.

அதிலும் பொதுவாகவே கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய அவர் விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் வித்யாசமான ஷாட்களை அடித்து 7 வருடங்கள் கழித்து ஆட்டநாயகன் விருது வென்று கம்பேக் கொடுத்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியதால் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு யாருமே எதிர்பாராத வகையில் தேர்வானார். ஆனால் ஃபைனலுக்கு தேர்வான பின் களமிறங்கி 4 போட்டிகளிலும் 15 (13) 0 (0) 21 (17) 21 (20) என மீண்டும் மெதுவாக விளையாடி சொதப்பும் அவர் பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் முக்கிய நேரத்தில் தடுமாற்றமாக செயல்படுகிறார்.

இதையும் படிங்க:CSK vs DC : எது நல்ல ஸ்கோர்ன்னு எனக்கே தெரியல. வெற்றிக்கு பிறகு வெளிப்படையாக பேசிய – கேப்டன் தோனி

குறிப்பாக இந்தியாவுக்காக கம்பேக் கொடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தேர்வாகி விட்டதால் இனிமேல் வண்டி அதிரடியாக ஓடாது என்பது போல் ரகானே செயல்படுவதாக ரசிகர்கள் கலாய்கின்றனர். எனவே அடுத்த வரும் முக்கிய போட்டிகளில் அவர் அதிரடியாக செயல்பட வேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement