IPL 2023 : கொஞ்சம் வாய மூடுங்க இதுல எக்ஸ்பர்ட்னு பெருமை வேற, ஆகாஷ் சோப்ராவை கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இதோ

Chopra
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் 4 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 175/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 52 (36), தேவதூத் படிக்கல் 38 (26), சிம்ரோன் ஹெட்மயர் 30* (18),அஸ்வின் 30 (22) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் சிங் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 176 ரன்களை துரத்திய சென்னைக்கு ருத்ராஜ் ஆரம்பத்திலேயே 8 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் 2வது விக்கெட்டுக்கு கான்வேயுடன் இணைந்து 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அஜிங்க்ய ரகானே 31 (19) ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால் அப்போது மிடில் ஆர்டரில் சிவம் துபே 8 (9), மொய்ன் அலி 7 (10), ராயுடு 1 (2) என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தினர்.

- Advertisement -

கலாய்க்கும் ரசிகர்கள்:
அத்துடன் டேவோன் கான்வேயும் 50 (38) ரன்களில் அவுட்டானதால் கடைசி 5 ஓவரில் சென்னைக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோனியும் ஜடேஜாவும் முடிந்தளவுக்கு அதிரடியாக போராடியதால் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. அதை வீசிய சந்தீப் சர்மா ஆரம்பத்திலேயே தோனியிடம் 2 சிக்ஸர்களை கொடுத்தாலும் கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது துல்லியமான யார்க்கர் பந்து வீசி சென்னைக்கு தோல்வியை பரிச்சளித்தார். அதனால் தோனி 32* (17) ரன்களும் ஜடேஜா 25* (15) ரன்களும் எடுத்துப் போராடிய போராட்டம் வீணானது.

முன்னாதாக இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு நாளும் எந்த அணி வெல்லும் என்பதை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் பக்கத்தில் அலசி ஆராய்ந்து கணிப்பை வெளியிட்டு வருகிறார். ஆனால் ஐபிஎல் தொடரிலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் கிடைத்த வாய்ப்புகளில் சுமாராகவே செயல்பட்ட அவர் கடந்த பல வருடங்களாக வர்ணனையாளராக தமக்கு பிடித்த வீரர்களுக்கு ஆதரவாக பேசுவதையும் சிறப்பாக செயல்பட்டாலும் சில வீரர்களை விமர்சிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக தமிழக வீரர்களுக்கு பெரும்பாலும் ஆதரவு கொடுக்காமல் பேசும் அவர் ரசிகர்களிடையே நிறைய அதிருப்தியை சம்பாதித்து வைத்துள்ளார் என்றே சொல்லலாம். அந்த நிலையில் இந்த தொடரின் கடைசி 4 போட்டியில் அவர் வெளியிட்ட கணிப்புகள் அப்படியே நேர்மாறாக நடைபெற்றுள்ளதால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் குஜராத் வெல்லும் என்று அவர் கணித்திருந்தார். ஆனால் அந்த போட்டியில் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை பறக்கவிட்டு மேஜிக் நிகழ்த்தியதால் குஜராத் தோற்று கொல்கத்தா வென்றது.

அதே போல திங்கள்கிழமை லக்னோக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வெல்லும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த போட்டியில் கடைசி பந்தில் சொதப்பிய பெங்களூருவை லக்னோ வீழ்த்தியது. அதே போல செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி உறுதியாக வெல்லும் என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இறுதியில் மும்பை கடைசி பந்து வரை போராடி முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை வெல்லும் என்று அவர் தெரிவித்தது சென்னை ரசிகரின் வயிற்றை புளியைக் கரைத்தது.

- Advertisement -

இறுதியில் அந்தப் போட்டியிலும் அவர் சொன்னதற்கு எதிராக சென்னை தோற்றது. அப்டி தினமும் அவர் வெளியிடும் கணிப்புகளுக்கு எதிராக நடைபெறுவதை பார்க்கும் ரசிகர்கள் “ஹே எப்புட்றா” என கலாய்த்து வருகிறார்கள். குறிப்பாக அடுத்து வரும் போட்டிகளில் தயவு செய்து நாங்கள் தோற்றாலும் பரவாயில்லை ஆனால் சென்னை வெற்றி பெறும் என்று சொல்லாமல் வாயை மூடுங்கள் என சென்னை ரசிகர்கள் அவரை கேட்டுக்கொள்கிறார்கள்.

இதையும் படிங்க:IPL 2023 : ரகானேவுடன் மோதல் – சென்னையில் பிறந்து அடுத்தடுத்த போட்டிகளில் சென்னையை தோற்கடித்த தமிழக லெஜெண்ட் அஷ்வின்

அத்துடன் கடந்த 4 நாட்களில் தொடர்ந்து வெளியிட்ட கணிப்புகளால் தோல்வியை சந்தித்த அணி ரசிகர்கள் “இதுல எக்ஸ்பர்ட்ன்னு பேரு வேற” என ஒன்றாக கூடி சென்று அவரை ட்விட்டரில் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement