இப்படி ஒரு வினோதமா ! ஒரு நொடியில் வார்னர் எடுத்த முடிவால் வியக்கும் ரசிகர்கள் – நடந்தது இதோ

David Warner Golden Duck
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 16-ஆம் தேதி நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் சந்தித்தன. நவிமும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 159/7 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு சர்ப்ராஸ் கான் அதிரடியாக 32 (16) ரன்களும் லலித் யாதவ் 24 (21) ரன்கள் எடுத்தாலும் ரிஷப் பண்ட் 7 (3) ரோவ்மன் போவெல் 2 (6) ஆகிய முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவையும் அதிர்ச்சியும் கொடுத்தனர்.

Sharfraz Khan DC vs PBKS

- Advertisement -

அதனால் 112/5 என தடுமாறிய அந்த அணியை 3-வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த மிட்செல் மார்ஷ் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 63 (48) ரன்கள் எடுத்து காப்பாற்றினார். பஞ்சாப் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

டெல்லி அசத்தல்:
அதை தொடர்ந்து 160 என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்திய பஞ்சாப்க்கு தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக 28 (15) ரன்களும் ஷிகர் தவான் 19 (16) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். ஆனால் மிடில் ஆர்டரில் அதிரடி காட்ட வேண்டிய பனுக்கா ராஜபக்சா 4 (5) லியாம் லிவிங்ஸ்டன் 3 (5) ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களில் அதிர்ச்சி கொடுத்தபோது காப்பாற்றுவார் என கருதப்பட்ட கேப்டன் மயங்க் அகர்வால் டக் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி கொடுத்தார்.

Kuldeep Yadav

அதனால் 55/4 என ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணியின் தோல்வி உறுதியான நிலையில் இறுதியில் ஜிதேஷ் சர்மா அதிரடியாக 44 (34) ரன்களும் ராகுல் சஹர் 25* (24) ரன்கள் எடுத்த போராடினாலும் 20 ஓவர்களில் 142/9 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் பரிதாபமாக தோற்றது. அந்த அளவுக்கு அசத்தலாக பந்துவீச்சை டெல்லி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்த ஷர்துல் தாகூர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற டெல்லி 13 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்து 14 புள்ளிகளுடன் பெங்களூருவை முந்தி 4-வது இடத்தை பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை உறுதியாக தக்கவைத்துள்ளது.

- Advertisement -

வார்னரின் முடிவு:
மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சொதப்பிய பஞ்சாப் பங்கேற்ற 13 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்தது. இதனால் கடைசி போட்டியில் வென்றாலும் கூட அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு 99% வாய்ப்பில்லை. முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லிக்கு பிரிதிவி ஷா இல்லாத நிலையில் நட்சத்திரம் டேவிட் வார்னருடன் மற்றொரு இளம் இந்திய வீரர் சர்ப்ராஸ் கான் களமிறங்கினார். பொதுவாகவே டெல்லியின் ஓபனிங் ஜோடியில் பிரிதிவி ஷா தான் முதல் ஓவரின் முதல் பந்தை எதிர் கொள்வார்.

David Warner DC

இருப்பினும் அவர் இந்த போட்டியில் இல்லாத காரணத்தால் அவருக்கு பதில் வாய்ப்பு பெற்ற சர்பராஸ் கான் வழக்கம்போல முதல் பந்தை எதிர்கொள்வதற்காக ஸ்ட்ரைட் பகுதிக்கு பேட்டிங் செய்ய சென்றார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் வேகப்பந்து வீச்சாளருக்கு பதில் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளரான லிவிங்ஸ்டனை முதல் ஓவர் வீசுவதற்கு களமிறக்கினார். அதை கவனித்த டேவிட் வார்னர் ஒரு வெளிநாட்டு சுழல் பந்து வீச்சாளரான லிவிங்ஸ்டனிடம் சர்ப்ராஸ் கான் சிக்கி அவுட்டாக வாய்ப்பு அதிகம் என நினைத்ததால் அவரிடம் பேசி எதிர்ப்புறம் நிற்கவைத்து விட்டு முதல் பந்தை தைரியமாக எதிர் கொண்டார்.

- Advertisement -

8 வருட வினோதம்:
ஆனால் எதிர்பாராத வகையில் லிவிங்ஸ்டன் வீசிய முதல் பந்திலேயே டேவிட் வார்னர் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். சர்பராஸ் கான் அவுட்டாகி விடக்கூடாது என்பதற்காக ஒரு நொடியில் மாற்றி யோசித்து டேவிட் வார்னர் எடுத்த முடிவு இறுதியில் அவருக்கே பாதகமாக முடிந்தது வர்ணனையாளர்களையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

1. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள வார்னர் 8 வருடங்கள் கழித்துதான் நேற்றைய போட்டியில் கோல்டன் டக் அவுட்டானார்.

2. அதில் ஆச்சரியம் என்னவெனில் ஹைதராபாத் அணிக்காக நிறைய வருடங்கள் விளையாடியபோது கோல்டன் டக் அவுட்டாகாத அவர் கடைசியாக டெல்லி அணிக்காக விளையாடிய போது தான் 2013இல் கோல்டன் டக் அவுட்டானார்.

3. அதில் மேலும் ஒரு ஆச்சரியம் என்னவெனில் 2013இல் இதே பஞ்சாப் அணிக்கு எதிராக தான் கடைசியாக அவர் கோல்டன் டக் அவுட்டாகியிருந்தார். அதைவிட வினோதம் என்னவெனில் 16 மே 2013இல் பஞ்சாப்புக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டான அவர் மீண்டும் அதே 16 மே 2022இல் அதே பஞ்சாப்புக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார் என்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

Advertisement