IND vs ENG : பொறுப்பட்ட பேட்டிங், இளம் இந்திய வீரரை விளாசும் ரசிகர்கள் – நடந்தது இதோ?

Shreyas Iyer
- Advertisement -

நாட்டிங்காம் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 3-வது டி20 போட்டியில் கடுமையாக போராடிய இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 215/7 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் ஜோஸ் பட்லர் 18 (9) ஜேசன் ராய் 27 (26) என சொற்ப ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த பிளிப் சால்ட் 8 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் 4-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர்.

அதில் 6 பவுண்டரி 5 சிக்சருடன் டேவிட் மாலன் 77 (39) ரன்களில் ஆட்டமிழக்க கடைசி நேரத்தில் களமிறங்கிய மொயின் அலி டக் அவுட்டானாலும் ஹரி ப்ரூக் 19 (9) ரன்களும் கிறிஸ் ஜோர்டான் 11 (3) ரன்களும் எடுத்தனர். மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாத லிவிங்ஸ்டன் 42* (29) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

போராடிய ஸ்கை:
அதை தொடர்ந்து 216 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ரிஷப் பண்ட் 1 (5) விராட் கோலி 11 (6) ரோஹித் சர்மா 11 (12) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 31/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் நங்கூரமாக பேட்டிங் செய்து 4-வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள். அதில் ஒருபுறம் சூரியகுமார் அதிரடி காட்ட மறுபுறம் கடைசிவரை பொறுமையாகவே பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 28 (23) ரன்களில் அவுட்டானார்.

அந்த நிலைமையில் வந்த தினேஷ் கார்த்திக் 6 (7) ரவீந்திர ஜடேஜா 7 (4) என முக்கிய பேட்ஸ்மேன்கள் பினிஷிங் செய்யாமல் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். ஆனாலும் கடைசி வரை அவுட்டாகாமல் முழு மூச்சை கொடுத்து போராடிய சூர்யகுமார் யாதவ் 14 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 117 (55) ரன்கள் குவித்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்குப்பின் பேட்ஸ்மேன்கள் இல்லாத காரணத்தால் 20 ஓவர்களில் 198/9 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

பொறுப்பற்ற ஷ்ரேயஸ்:
இருப்பினும் ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் பெரிய வெற்றிகளை பதிவு செய்திருந்த காரணத்தால் 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்தியா இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக்கவ்வ வைத்து கோப்பையை முத்தமிட்டது. அதைவிட சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் தக்க பதிலடியும் கொடுத்துள்ளது. இப்போட்டியில் ரோகித் சர்மா உள்ளிட்ட டாப் ஆர்டர் மற்றும் தினேஷ் கார்த்திக் உட்பட லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவர் கணிசமான 30 ரன்கள் எடுத்திருந்தால் கூட இந்தியா வென்றிருக்கும்.

அதைவிட போராட்டமாக பேட்டிங் செய்த சூர்ய குமாருடன் 5-வது ஓவரில் ஜோடி சேர்ந்து 15 ஓவர்கள் வரை நங்கூரமாக பார்ட்னர்ஷிப் போட்ட ஸ்ரேயாஸ் ஐயர் செட்டிலான பின்பும் கூட கடைசி வரை அதிரடியை தொடங்காமல் 28 (23) ரன்களில் நடையை கட்டினார். பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறும் அவர் இப்போட்டியிலும் அவர்களுக்கு எதிராக தடுமாறி மெதுவாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் அவர் அடித்த 2 சிக்ஸர்களும் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அடித்ததாகும்.

- Advertisement -

வலையில் எலி:
ஆரம்பம் முதலே சுழல் பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொள்ளும் இவர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தொடர்ந்து தடுமாறி வருகிறார். குறிப்பாக உயரமான வெளிநாட்டு பவுலர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு கடந்த சில வருடங்களாகவே அவுட்டாகி வருகிறார். அதனால் இவர் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறுவார் என்பதை தெரிந்து வைத்துள்ள எதிரணிகள் இவர் களமிறங்கும் போதெல்லாம் ஷார்ட் பிட்ச் பந்துகளை போட்டு எளிதாக காலி செய்துவிடுகிறது. குறிப்பாக சமீபத்திய டெஸ்ட் போட்டியில் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக இருந்தபோது இவரின் வீக்னஸ் பற்றி தெரிந்த பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்தின் பயிற்சியாளராக செயல்படும்போது பெவிலியனில் அமர்ந்து கொண்டே ஒற்றை செய்கையால் அவுட்டாக்கினார்.

அதனால் விரைவில் இந்த பிரச்சனையை சரி செய்யுமாறு வாசிம் ஜாபர் போன்ற முன்னாள் வீரர்கள் ஷ்ரேயஸ் ஐயரை எச்சரித்திருந்தனர். ஆனால் அதற்காக மெனக்கெட்டு முன்னேற்றமடையாத அவர் தொடர்ந்து அதே வலையில் எலி போல சிக்கி வருவது விரைவில் அவரை இந்திய அணியிலிருந்து தூக்கிப் போடப்போவதை இப்போதே காட்டுகிறது.

இதையும் படிங்க : IND vs ENG : கங்குலி, சேவாக்கையே தண்டிச்சீங்க – விராட், ரோஹித்தை மட்டும் ஏன் சும்மா விடறீங்க

இதனால் இவர் டி20 அணியில் செட்டாக மாட்டார் என முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் ப்ரசாத் டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் ரசிகர்களும் அவரை சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர்.

Advertisement