அசத்தலாக செயல்பட்டும் அந்த 2 பேருக்கு ஏன் சான்ஸ் கொடுக்கல? அவங்க பாவம் – ரசிகர்கள் கொந்தளிப்பு

Shaw
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா 3 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ளதால் அரை இறுதிக்கு செல்ல எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வரும் நவம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவுக்கு வரும் இந்த உலகக் கோப்பையை முடித்துக் கொண்டு அப்படியே பக்கத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு பயணிக்கும் இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கிறது. அதை தொடர்ந்து அண்டை நாடான வங்கதேசத்துக்கு செல்லும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்குகிறது.

இந்த அடுத்தடுத்த 4 தொடர்களில் பங்கேற்கும் 4 வகையான இந்திய அணியை இந்திய தேர்வுக்குழு நேற்று வெளியிட்டது. அதில் முதலாவதாக நடைபெறும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் கேப்டனாக செயல்படுகின்றனர். அந்த அறிவிப்பில் குறிப்பாக நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக், குல்தீப் சென் உட்பட நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தின் மூத்த வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு கழற்றி விடப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அசத்தலாக செயல்பட்டும்:
ஆனால் சமீப காலங்களில் உள்ளூர் தொடரில் அசத்தலாக செயல்பட்டும் இளம் தொடக்க வீரர் பிரிதிவி ஷா’வுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது நிறைய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. ஏனெனில் 2018ஆம் ஆண்டு ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கேப்டனாக வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அறிமுக டெஸ்ட் போட்டியிலே சதமடித்து சாதனை படைத்தார். அதனால் 3 வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி சில அசத்தலான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவரை சேவாக், சச்சின், லாரா ஆகியோர் கலந்த கலவை என அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியிருந்தார்.

இருப்பினும் அதன்பின் தொடர்ச்சியாக சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்த தவறிய அவர் சுமாரான பிட்னெஸ் காரணமாகவும் அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனாலும் அதற்காக மனம் தளராமல் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தலாக செயல்பட்டு வரும் அவர் சமீபத்தில் நடைபெற்ற துலீப் டிராபியில் அடுத்தடுத்த சதங்களை அடித்து இந்தியா ஏ அணிக்காக ஒரு போட்டியில் அதிரடியாக 77 (44) ரன்களை குவித்து ஃபார்முக்கு திரும்பினார்.

- Advertisement -

அதை விட நடைபெற்று வரும் சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் முதல் முறையாக சதமடித்து 134 ரன்களை தெறிக்கவிட்ட அவர் தனது உடல் எடையையும் 5 கிலோ குறைத்து இந்தியாவுக்காக விளையாடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்படி கடினமாக உழைத்து முன்னேறியுள்ள அவர் இந்த தொடரில் தேர்வாகும் நம்பிக்கையுடன் காத்திருந்த போதிலும் இடம் கிடைக்காததால் ஏமாற்றமடைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய் பாபா படத்தை பதிவிட்டு “இறைவா நடப்பதை நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய்” என்ற வகையில் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல் நிறைய ரசிகர்களும் கம்பேக் கொடுக்க இன்னும் அவர் என்ன செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பரிதாபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அத்துடன் வங்கதேசத்துக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மும்பை இளம் வீரர் சர்ப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. ஏனெனில் இதுவரை உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் 29 போட்டிகளில் 2928 ரன்களை 81.33 என்ற அபாரமான சராசரியில் எடுத்துள்ள அவர் 2022 ரஞ்சிக் கோப்பையில் மட்டும் வெறும் 6 போட்டிகளில் 982 ரன்களை 122.75 என்ற அபாரமான சராசரியில் குவித்து தற்சமத்தில் முரட்டுத்தனமான பார்மில் உள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா கப் அடிக்க வந்திருக்கலாம் ஆனால் எதிர்பாரா சம்பவம் ஒன்னு காத்திருக்கு – சாகிப் அல் ஹசன் எச்சரிக்கை

அதிலும் ரஞ்சி கோப்பையில் சதமடித்த போது இந்திய அணிக்கு தேர்வாக இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று கலங்கிய கண்களுடன் கொண்டாடிய அவருக்கு இந்த வங்கதேச தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் கடைசி நேரத்தில் மீண்டும் அவர் கழற்றி விடப்பட்டுள்ளதால் கோபமடைந்துள்ள ரசிகர்கள் இந்தியாவுக்காக விளையாட இன்னும் அவர் எவ்வளவு ரன்கள் குவிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

Advertisement