ஆணவத்தின் உச்சத்தை தொட்ட ரியன் பராக்.. கர்வமான சைகையை விளாசும் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

Riyan Parag 2
- Advertisement -

இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சயீத் முஸ்தாக் அலி கோப்பையின் 2023 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட அசாம் மற்றும் பெங்கால் அணிகள் மோதிய காலிறுதி போட்டி அக்டோபர் 31ஆம் தேதி பஞ்சாப்பில் நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் சுமாராக விளையாடி 20 ஓவரில் 138/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கரண் லால் 24 ரன்கள் எடுக்க அசாம் சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் செங்குப்தா 3, கேப்டன் ரியன் பராக் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 139 ரன்கள் துரத்திய அசாம் அணிக்கு கேப்டன் ரியான் பராக் அதிரடியாக 50* (31) ரன்களும் பிசல் ராய் 45* (36) ரன்களும் எடுத்து 17.5 ஓவரிலேயே மிகவும் எளிதான வெற்றி பெற வைத்து அரையிறுதிக்கு தகுதி பெற உதவினர்.

- Advertisement -

ஆணவத்தின் உச்சம்:
முன்னதாக இத்தொடரில் கடந்த 6 போட்டிகளில் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த ரியான் பராக் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 6 போட்டிகளில் 50 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார். அந்த நிலைமையில் இப்போட்டியிலும் தொடர்ந்து 7வது முறையாக அரை சதமடித்த அவர் அதை “இங்குள்ள இதர வீரர்கள் என்னுடைய அளவுக்கு கிடையாது. அவர்களுக்கு நான் ஒரு படி மேல்” என்று அப்பட்டமாக பார்க்கும் அனைவருக்கும் புரியும் அளவுக்கு கையால் சைகை செய்து வித்தியாசமாக கொண்டாடினார்.

அதை பார்த்த ரசிகர்கள் இன்னும் எதுவுமே சாதிக்காமல் சாதாரண உள்ளூர் தொடரில் 7 போட்டிகளில் 50 ரன்கள் அடித்ததும் ஆணவத்தின் உச்சத்திற்கு சென்று விட்டீர்களா என்று ரியன் பராக்கை சரமாரியாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் இதுவரை 44 இன்னிங்ஸில் வெறும் 600 ரன்களை 16.2 என்ற படுமோசமான சராசரியிலும் 123.97 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் 5 வருடங்களாக ராஜஸ்தான் அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெற்றும் எப்போதுமே சிறப்பாக செயல்படாத அவர் அடிக்கடி ட்விட்டரில் விராட் கோலி அளவுக்கு சாதித்ததை போல் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதை விட அஸ்வின், ஹர்ஷல் படேல் போன்ற சீனியர்களிடம் 2022 ஐபிஎல் தொடரில் மரியாதையின்றி நடந்து கொண்ட அவர் சுமாரான கேட்ச் பிடித்ததால் சாதகமான தீர்ப்பு வழங்காத நடுவரை கலாய்க்கும் வகையில் நடந்து கொண்டார்.

இதையும் படிங்க: ஜாம்பவான்கள் கில்கிறிஸ்ட், சங்கக்காரா, ஜேக் காலிஸை முந்திய டீ காக்.. புதிய வரலாற்றை எழுதி 2 உலக சாதனை

அதற்கு இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்தியூ ஹெய்டனையும் மறைமுகமாக ட்விட்டரில் கலாய்த்த அவரை வாயில் பேசாமல் முதலில் செயலில் காட்டுங்கள் என்று ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருவது வழக்கமாகும். அந்த நிலையில் தற்போது செயலில் அசத்தினாலும் 7 தொடர்ச்சியான அரை சதங்கள் அடித்ததற்காக மற்றவர்களை விட பெரியவன் என்று கர்வத்துடன் கொண்டாடாதீர்கள் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement