இன்னுமா திருத்தல ! ஆஸிக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவாக நடந்துகொண்ட பிரபல அம்பயர் – ரசிகர்கள் காட்டம்

Dharmasena
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றது வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் அட்டகாசமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0 என ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து அந்த தொடரின் கடைசி சம்பிரதாய போட்டி நேற்று ஜூன் 11-ஆம் தேதி பல்லேக்கேல் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்வதாக தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 176/5 ரன்களை சேர்த்தது.

அந்த அணிக்கு டேவிட் வார்னர் 39 (30) கேப்டன் ஆரோன் பின்ச் 29 (20) என தொடக்க வீரர்கள் அதிரடியான ரன்களை எடுக்க மிடில் ஆர்டரில் கிளன் மேக்ஸ்வெல் 16 (9) ஜோஸ் இங்லிஷ் 0 (1) என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். இருப்பினும் நட்சத்திரங்கள் ஸ்டீவ் ஸ்மித் 37* (22) ரன்களும் மார்க்க ஸ்டாய்நிஸ் 38 (23) ரன்களும் எடுக்க இறுதியில் மேத்யூ வேட் 13* (8) ரன்கள் எடுத்தார். இலங்கை சார்பில் அதிகபட்சமாக மகீஷ் தீக்சனா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

இலங்கை மாஸ்:
அதை தொடர்ந்து 177 என்ற இலக்கை துரத்திய இலங்கைக்கு குணத்திலகா 15 (12) நிசாங்கா 27 (25) அலங்கா 26 (19) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். போதாகுறைக்கு நடு வரிசையில் வந்த பானுக்கா ராஜபாக்சா 17 (13) குசல் மெண்டிஸ் 6 (8) என சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடவை கொடுத்ததால் 14 ஓவர்களில் 98/5 என திணறிய இலங்கை தோல்வியின் பிடியில் சிக்கியது. அந்த சமயத்தில் வந்த வணிந்து ஹசரங்கா 8 (7) ரன்களில் அவுட்டானதாலும் மறுபுறம் கேப்டன் தசுன் சனாக்கா 6* (12) என தடுமாறிக் கொண்டிருந்ததாலும் இலங்கையின் தோல்வி உறுதி என்று அனைவரும் நினைத்தனர்.

ஆனால் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 59 ரன்கள் தேவைப்பட்ட போது அன்னியனாக மாறிய ஷனாக்கா ஜோஸ் ஹெஸல்வுட வீசிய 18-வது ஓவரில் 6, 6, 4, 4 என 21 ரன்களை விளாசி திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதோடு நிற்காமல் அடுத்த 2 ஓவர்களிலும் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய அவர் மொத்தம் 54* (25) ரன்களை விளாசியதால் 19.5 ஓவரிலேயே 177/6 ரன்களை எடுத்த இலங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் யாருமே எதிர்பாராத வகையில் திரில் வெற்றியை சுவைத்தது. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் கடைசி 3 ஓவரில் அதிக ரன்களை (59) அடித்து வென்ற அணி என்ற உலக சாதனையை இலங்கை படைத்தது. அத்துடன் கடைசி 3 ஓவரில் 50 ரன்கள் குவித்த சனாகா டி20 கிரிக்கெட்டில் கடைசி 3 ஓவரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

தரமில்லா தர்மசேனா:
அதனால் தொடரை இழந்தாலும் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்த்த இலங்கை அணியினர் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை மக்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தினர். முன்னதாக இப்போட்டிகள் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய ஆஸ்திரேலியாவின் ஜே ரிச்சர்ட்சன் அழுத்தத்தால் ஆரம்பத்திலேயே 2 ஓய்ட்கள் வீசியது உட்பட மொத்தமாக முதல் 2 பந்துகளில் 4 ரன்கள் கொடுத்தார். இருப்பினும் அடுத்த 3 பந்துகளில் 4, 4, 6 என 14 ரன்களை அடித்த ஷனாக்கா ஸ்கோரை சமன் செய்தார்.

அப்போது கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட போது அதை எடுக்க விடக்கூடாது என்ற நோக்கத்தில் ஒயிட் போல ஜே ரிச்சர்ட்சன் வீசினார். ஆனால் உண்மையாகவே அந்த பந்து ஒயிட் கோட்டுக்கு உள்ளே வந்ததுடன் பேட்ஸ்மேனும் சற்று வலப்புறமாக நகர்ந்தார். அதன் காரணமாக அது கண்டிப்பாக ஓய்வு கிடையாது என்ற சூழ்நிலையில் அம்பயர் குமார் தர்மசேனா ஒயிட் வழங்கினார். அதனால் 1 பந்து மீதம் வைத்து இலங்கை எளிதாக வென்றது.

இருப்பினும் இலங்கையைச் சேர்ந்த அவர் ஒயிட் இல்லை என தெரிந்தும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தங்களது நாடான இலங்கைக்கு சாதகமாகவும் தீர்ப்பு வழங்கியதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சரமாரியாக ஆதாரத்துடன் விமர்சிக்கின்றனர். ஏற்கனவே கடந்த 2019 உலகக்கோப்பை இறுதி போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பந்து பட்டத்திற்காக இங்கிலாந்துக்கு எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கிய அவர் நியூசிலாந்துக்கு தோல்வியளிக்கும் வகையில் அம்பயரிங் செய்ததால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் உலக அளவில் திட்டுக்களை வாங்கிக் கொண்டார். ஆனாலும் இன்னும் திருந்தாத அவர் வரலாற்றில் ஒரு மோசமான அம்பயராக மாறி விட்டதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

Advertisement